விஜே சித்ராவுடன் கடைசி தருணம் : விஜே பிரியங்கா உருக்கம்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவுடன் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜே பிரியங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் திடீரென தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து வருகிறது. இந்த தற்கொலைக்கு அவர்களது மனஉளைச்சலே காரணம் என கூறப்பட்டாலும், உணமையான காரணம் என்ன என்பது புரியதா புதிராகவே உள்ளது.

இந்நிலையில் கடந்த 8 வருடங்களாக சின்னத்திரையில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஜே சித்ரா. கடந்த டிசம்பர் 9-ந் தேதி வீட்டில் இவர் மர்ம்மான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவரது மரணம் தற்கொலை என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சித்ரா விஜய் தொலைக்காட்சியில் கடைசியாக ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படப்பிடிப்பில் இருந்த அவர், அப்போது தனது தாயிடம் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த நாள் காலை, நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

இவரது மரணம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பாக பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சித்ராவுடன் பணியாற்றிய சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், விஜய் டிவியில் பிரபலமான ஆங்கர்  வி.ஜே. பிரியங்கா தேஷ்பாண்டே சித்ராவுடன் தனது கடைசி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Last moment with vj chitra vj priyanka instagram post

Next Story
2020 -ல் வெளிவந்து மனம் கவர்ந்த முத்தான திரைப்படங்கள்2020 top and good movies - 2020 -ல் வெளிவந்து மனம் கவர்ந்த முத்தான திரைப்படங்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express