ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் கடைசி 15 நிமிடங்கள் : இன்ப அதிர்ச்சி கொடுக்க வந்த கணவருக்கு பேரதிர்ச்சி!

சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக திடீரென்று வந்தாக கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, அவருக்கு நிகழ்ந்த சம்பவத்தை  துபாய் ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி, தனது கணவர்   போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூருடன் சென்ற வாரம் துபாய் சென்றுள்ளார். திருமணம் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக அனைவரும் குடும்பத்துடன் சென்றுள்ளனர்.  திருமணம் முடிந்த பின்பு, போனி கபூர் முக்கியமான வேலை இருப்பதாக கூறி மும்பைக்கு திரும்பியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி தனது, மகளுடன் ஜூமைரா  எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் தங்கிருந்துள்ளார். இந்நிலையில், கடந்த  சனிக்கிழமை ( 24.2.18) அன்று, போனி கபூர் தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக, யாரிடமும் சொல்லாமல், துபாய் சென்றுள்ளார், பின்பு, ஸ்ரீதேவி தங்கிருந்த அறைக்கு சென்று, சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக திடீரென்று  வந்தாக கூறியுள்ளார். அப்போது மணி 5.30.

அதன் பின்பு, நடிகை ஸ்ரீதேவி, தனது கணவருடன் சுமார் 15 ஃநிமிடங்கள் மனம்விட்டு பேசியுள்ளார். துபாயில் நடந்த சுவாரசியமான எல்லா நிகழ்வுகளை அவருடன் பகிர்ந்துள்ளார். அதன் பின்பு, ஹோட்டல் நிர்வாகம் இருவரையும் இரவு உணவுக்காக அழைத்துள்ளது. இதனால் ஃப்ரெஷ் ஆவதற்காக ஸ்ரீதேவி பாத்ரூம் சென்றுள்ளார். அவர், சென்று 15 நிமிடங்கள் ஆகியும் எந்தவித சத்தமும் கேட்காததால் போனி கபூர், கதவை தட்டியுள்ளார்.

ஸ்ரீதேவி பதில் அளிக்காததால்,  போனி கபூர்  தனது நண்பரின் உதவியுடன் கதவை உடைத்துள்ளார்.  அப்போது ஸ்ரீதேவி, குளியல் அறை தொட்டியில் மயங்கிய நிலையில், கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவர்களுக்கு ஃபோன் செய்யப்பட்டுள்ளது. அறைக்கு வந்து ஸ்ரீதேவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதன் பின்பு, இரவு 9 மணியளவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மனைவியுடன் செலவிட்ட அந்த 15 நிமிடங்களை வாழ்நாள் தோறும் தன்னால் மறக்க முடியாது என்று, போனி கபூர் கண்ணீருடன் அழுது வருகிறார். துபாயில் இருந்து அம்பானியின் தனி விமானம் மூலம் ஸ்ரீதேவியின் உடல் இன்று  மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close