மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
உலகிலேயே அதிகமான திரைப்படப்பாடல்களை அதாவது 30 ஆயிரம் பாடல்களைப் பாடிய பாடகி என்ற உலக சாதனையை நிகழ்த்தியர் லதா மங்கேஷ்கர்.
ஏராளமான ஹிந்திப் பாடல்களை பாடி பிரபலமடைந்த லதா மங்கேஷ்கர். 1987-ம் ஆண்டு தான் நேரடி தமிழ் படத்துக்காக பாடினார். அந்த ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ஆனந்த் என்கிற படத்துக்காக ஆராரோ ஆராரோ’ என்ற பாடலை இளையராஜா இசையில் பாடினார் லதா மங்கேஷ்கர்.
அதன் பிறகு 1988-ல், இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வளையோசை கலகலவென’ என்கிற பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமுடன் உடன் இணைந்து பாடினார்.
இந்தப் பாடல் இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
பிறகு, அதே ஆண்டில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்கிற படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை, பாடகர் மனோவுடனும் தனியாகவும் பாடியிருந்தார்.
இந்தப் படத்திற்கும் இளையராஜா தான் இசை. அதன்பிறகு அவர் தமிழில் வேறெந்த பாடல்களையும் பாடவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil