மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா, தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ்' படத்தின் 'சில் ப்ரோ' பாட்டுக்கு, ‘குக்கு வித் கோமாளி' பிரபலம் புகழுடன் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடலூரைச் சேர்ந்த புகழ், பள்ளிப் படிப்புடன் சென்னைக்கு வேலை தேடி வந்தார். பின்னர், சென்னையில் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு, ஒரு வழியாக விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு அறிமுகமானார். இதையடுத்து, விஜய் டிவியிலேயே, அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு பகுதியில் நடித்து வந்தார்.
இதற்கு அடுத்துதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் புகழுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சின்னத்திரையல் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை சித்ரா, எந்த வேறுபாடும் பாராமல் சக நடிகர்களுடன் நடனமாடியுள்ள வீடியோவை அனைவரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.