வீடியோ: ஜெயா டிவியில் விஜே சித்ரா சீரியல்; இது எப்போ?

ஜெயா தொலைக்காட்சியில் ‘மன்னன் மகள்’ என்ற தொடரில்  சின்னத்திரை நடிகையாக சித்ரா அறிமுகமாகினார்.

VJ Chitra Tamil News: 2014 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில்  ‘மன்னன் மகள்’ என்ற தொடரில் வி.ஜே சித்ரா நடித்த வீடியோக்கள் சமூக ஊடங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில், சரவணன் மீனாட்சி,  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டார்லிங் டார்லிங், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வேலுநாச்சி  போன்ற தொடர்களில் நடித்த வி.ஜே சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

ஆனால், துருஷ்டவிதமாக யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்த டிசம்பர் 9-ந் தேதி சென்னையில் விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரின் மரணம் சின்னதிரையுலகில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது காதல் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மரணத்திற்குப் பிறகு, அவரது ரசிகர்கள் சித்ராவின் நியாபகங்களை சமூக வலைத்தளங்களில் பகிரிந்து கொண்டு வருகின்றனர். சித்ராவின் கனவு, எதிர்பார்ப்பு, ஆசை, வாழ்க்கைப் போராட்டம், சினிமா வாழ்க்கை உள்ளிட்ட பல தலைப்புகளில் அவரது  ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.


இந்நிலையில், சன் தொலைக்காட்சியில், சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடருக்கு முன்னதாக ஜெயா தொலைக்காட்சியில் ‘மன்னன் மகள்’ என்ற தொடரில்  சித்ரா சின்னத்துறையில் அறிமுகமாகியுள்ளார். அந்த தொடரில், அவர் நடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வி.ஜே சித்ரா முதுகலை பட்டம் பெற்றவர். தன்னுடைய பிஎஸ்சி இளங்களைப் பட்டத்தை சென்னையில் உள்ள டாக்டர் எம். ஜி. ஆர் ஜானகி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியிலும், அதையடுத்து 2012-2014 ஆம் ஆண்டு எம். எஸ். சி உளவியல் படிப்பை எஸ். ஐ. டி கல்லூரியில் முடித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Late vj chitra 2014 jaya tv mannan magal serial vj chitra viral videos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com