/tamil-ie/media/media_files/uploads/2021/01/vj-chitra-2.jpg)
மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை சித்ரா நினைவாக முக்கிய சீரியல் பிரபலங்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் Common DP புகைப்படத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி தனியார் விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சித்ராவின் காதல் கணவர் ஹேமந்தை கைது செய்தனர்.
சித்ரா இறப்பதற்கு முன்பு நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது. கால்ஸ் படத்தை சபரிஷ் இயக்கியுள்ளார். இன்ஃபினிட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
கால்ஸ் திரைப்படத்தில் விஜே சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த ட்ரைலரில் விஜே சித்ரா பேசியுள்ள வசனங்கள் அவருடைய நிஜ வாழ்க்கைக்கும் அவருடைய துயரமான முடிவுக்கும் பொருந்திப்போவதால் ரசிகர்கள் பலரும், கால்ஸ் ட்ரைலரில் பேசும் அந்த கடைசி டயலாக அப்படியே அவருடைய ரியல் லைஃப்-ஐ சொல்வதாக எமோஷனலாக உள்ளது என்று ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர்.
இந்த படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சித்ராவின் மரண வழக்கை விசாரித்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ, தனது விசாரணை அறிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த அறிக்கை தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகத நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நிபுணர் குழு நடிகை சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.