மறைந்த சின்னத்திறை நடிகை வி.ஜே சித்ரா நடித்த ‘ கால்ஸ்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.
‘கால்ஸ்’ திரைப்படத்தின் இசைத் தொகுப்பை சித்ராவின் பெற்றோர் வெளியிட, படத்தின் ட்ரைலரை சினேகா, திலகவதி ஐ.பி.எஸ், சிவி திலகவதி , சின்மயி உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் வெளியிடுகின்றனர்.
The upcoming venture of Late #VJChitra‘s #Calls Movie Audio & Trailer will be launched tomorrow at 9 Am on BehindwoodsTV! #PoornimaBhagyaraj #Thilagavathi @actress_Sneha #VarshaNair #PadmaPriya #ThilagavathiCV @Chinmayi @Priyanka2804 @tejaswinimanogn @PRO_Priya @spp_media pic.twitter.com/BbHwkErSc1
— Jaya TV (@JayaTvOfficial) January 28, 2021
காலை 9 மணியளவில் இசைத் தொகுப்பும், ட்ரைலரும் வெளியிடப்படுகிறது. அறிமுக இயக்குநர் சபரீஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். மறைந்த சித்ராவின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் படத்தின் ட்ரைலரைக் காண ஆர்வமாக உள்ளனர்.
கடந்தண்டு டிசம்பர் மாதம் சென்னையில் உள்ள விடுதி ஒன்றில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை அதிரிசிக்குள்ளாக்கியது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகை என பெயர்பெற்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil