லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் 2 பிரிவுகள் ரத்து; நீதிமன்றம் உத்தரவு

கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் 2 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் 2 பிரிவுகள் ரத்து; நீதிமன்றம் உத்தரவு

கோச்சடையான்  பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் 2 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கோச்சைடையான்  என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஆட் புரு அன்ட் மீடியாஒன் குளோபல் எண்டர்டெய்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில்  லதா ரஜினிகாந்த் நிதி விஷயங்கள் குறித்து அந்த நிறுவனம் கருத்து கூற தடை உத்தரவு பெற்றார். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு அந்த தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள மாஜிஸ்ரேட்டு  நீதிமன்றத்தில் தனியார் புகார் ஒன்றை தாக்கல் செய்தது. அதை விசாரித்த கோர்ட்டு தடை உத்தரவை நீக்கியதுடன், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த தனியார் புகார் குறித்து விசாரிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு கர்நாடக  நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அவருக்கு எதிரான வழக்கை தொடர அனுமதி வழங்கியது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய கோரி கர்நாடக நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பு கூறியுள்ளார். அதில் லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் பாதியை ரத்து செய்துள்ளது. அதாவது அவருக்கு எதிரான ஏமாற்றுதல், தவறான தகவல்களை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு என 2 பிரிவுகளை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஆவணங்களை திரித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து கீழ்நீதிமன்றங்கள் தொடர்ந்து விசாரணை நடத்த கர்நாடகா உயர்நீதிமன்றம்  அனுமதித்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Latha rajinikanth verdict on karnataka high court

Best of Express