தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றம் என்ற அறக்கட்டளை, சமூக அமைப்பை தொடங்கினார். இதில் பல்வேறு பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும் இதில் இணைந்து செயல்டுகின்றனர்.
மாற்றம் அமைப்பு மூலம் மாற்றுத் திறனானிகளுக்கு வாகனம், விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் உள்பட பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக அமைப்பு தொடங்கியதும் விவசாயிகளுக்கு 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் தற்போது இந்த அமைப்பில் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். இவர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை மாற்றம் அமைப்புக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமிக்கு இந்த டிராக்டர் வழங்கப்பட்டது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நேரில் சென்று வழங்கினர். டிராக்கடரை கொடுத்த அவர்கள், முனுசாமியிடம் மற்ற ஏழை எளிய விவசாயிகளுக்கும் டிராக்டர் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“