தி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி! ஹீரோயின் நயன்தாராவா?

முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் இதற்காக பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறதாம். 

முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் இதற்காக பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறதாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Legend Saravana Stores Saravana Arul

லெஜெண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன், முதலில் நடிகைகள் ஹன்ஸிகா மற்றும் தமன்னாவோடு தனது கடை விளம்பரத்தில் நடித்தார்.

Advertisment

அப்போது சரவணனின் தோற்றத்தை முன்வைத்து நிறைய கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானார். இருப்பினும் தனது தன்னம்பிக்கையை கை விடாமல், தொடர்ந்து தனது கடை விளம்பரங்களில் தானே முன்னணி கதாபாத்திரமாக நடித்தார்.

முன்பு கேலி செய்தவர்கள் பின்னர், அவரின் தன்னம்பிக்கையை பாராட்டத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அவர், நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வலம் வந்தன. பின்னர் அந்தத் தகவல் பொய்யானது.

இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள். பிரபல இயக்குநர்கள் ஜே.டி-ஜெர்ரி இயக்கும் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.

Advertisment
Advertisements

இதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி டெக்னீஷியன்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறதாம். முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் இதற்காக பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறதாம்.

இது பற்றி இயக்குநர்களின் நெருங்கிய வட்டாரத்தினர், “ஆம் இந்தப் படத்திற்கான முதற்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றனர்.

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: