விளம்பரத்தில் ஜோடி சேர்ந்த நடிகைகள், பட விழாவுக்கு கூட வரவில்லையே: சோகத்தில் 'லெஜண்ட்'டார்...
Legend saravanan movie function tamil heroines absent: லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் அவருடைய சொந்த தயாரிப்பில், ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜைக்கு அவருடன் விளம்பரங்களில் நடித்த நட்சத்திர நடிகைகள் யாரும் வரவில்லை என்பது அவரை வருத்தமடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
legend saravanan new tamil movie, saravana Stores owner tamil heroines absent
Saravana stores owner Legend Saravanan new tamil movie starts: லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தனது கடை விளம்பரங்களில் மட்டுமே நடித்துவந்த நிலையில், அவருடைய சொந்த தயாரிப்பில், ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழா பூஜைக்கு அவருடன் விளம்பரங்களில் நடித்த நட்சத்திர நடிகைகள் யாரும் வரவில்லை என்பது அவரை வருத்தமடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Advertisment
தமிழகத்தின் மிகப் பெரிய ஜவுளி கடைகளில் ஒன்று தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ். தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜண்ட் சரவணன், தன்னுடைய கடை விளம்பர படங்களில் தானே நடித்து வந்தார். அவருடன் விளம்பரங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகள் நடித்துள்ளனர். முதலில் அவர் விளம்பரங்களில் நடிப்பதை பலர் கிண்டல் செய்தாலும் அவருடைய தன்னம்பிக்கை அதற்காக அவர் தன்னை தயார் செய்துகொண்ட விதம் எல்லாவற்றையும் மக்கள் பின்னர் வரவேற்கவே செய்தனர்.
இதனால், விளம்பரங்களில் நடித்துவந்த லெஜண்ட் சரவணனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதற்காக, அவர் பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். இறுதியாக அவருடைய விளம்பரங்களை இயக்கிய ஜேடி-ஜெர்ரி இணை இயக்குனர்களின் கதையை தேர்வு செய்தார். லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார்.
Advertisment
Advertisements
லெஜண்ட் சரவணன் நடிப்பதற்கான கதை மற்றும் இயக்குனர்கள் முடிவாகிவிட்டாலும், நடிகைகளை தேர்வு செய்வது என்பது கொஞ்சம் சிக்கலாகத்தான் இருந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட பலர் அவருடன் விளம்பரப் படங்களில் நடனமாடி நடித்துள்ளனர். ஆனால், அவர்களில் யாரும் அவருடன் ஜோடியாக சினிமாவில் நடிக்க முன்வரவில்லை. இந்தப் படத்துக்காக பலருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவழியாக புதுமுக நடிகை கீத்திக்கா தி லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்துக்கு ‘புரொடக்ஷன் நம்பர் -1’ என்று பெயரிடப்பட்டு படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு தனது விளம்பர படங்களில் நடித்த நடிகைகள் பலரும் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ஒருவரும் வாராததால் லெஜண்ட் சரவணன் வருத்தமடைந்ததாகக் கூறப்படுகிறது.
‘புரொடக்ஷன் நம்பர் -1’ படத்தின் பூஜையை ஏ.வி.எம்.சரவணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கிவைத்தார்.
லெஜண்ட் சரவணனுடன் இந்தப் படத்தில் கீத்திகா மட்டுமல்லாமல், மற்றொரு பிரபல நடிகையும் நடிக்க உள்ளதாகக் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இவர்களுடன் நடிகர்கள் பிரபு, நாசர், விவேக், விஜயகுமார், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பலர் முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் வெளிநாடுகளில் நடக்கவுள்ளது.
‘புரொடக்ஷன் நம்பர் -1’ படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுகோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். எடிட்டர் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளம் இந்தப் படத்தில் களம் இறங்கி இருப்பதால் தமிழ் சினிமா உலகை கவனிக்க வைத்துள்ளனர்.
விளம்பரப்படங்களில் நடித்தபோது முதலில் கிண்டல் செய்தவர்கள் பிறகு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அனைவரும் அமைதியானார்கள். அதேபோல, சினிமாவில் வெற்றி பெறுவாரா? என்பதை இந்தப் படம் தீர்மானிக்கலாம்.