லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் சண்டை காட்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சரவணா ஸ்டோர்ஸ் கடை அதிபரான அருள், தனது கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்தார். தற்போது, சினிமாவில் கதாநாயகம் வேடம் ஏற்று நடித்து வருகிறார்.
விளப்பர பட இயக்குனர்களான ஜேடி அண்ட் ஜெர்ரி படத்தை இயக்குகிறார்கள். லெஜண்ட் சரவணன் நிறுவனமே படத்தை தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தில் கீதிகா திவாரி என்கிற புதுமுகம், லெஜண்ட் சரவணன் ஜோடியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. சென்னை வட பழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவில் புதிய படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி படத்தை தொடங்கி வைத்தனர்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“