Advertisment

இத்தனை மொழிகளில் வெளியாகிறதா லெஜண்ட் சரவணா படம்? நாயகி வெளியிட்ட புது அப்டேட்

நெட்டிசன்கள் பலரும் லெஜண்ட் சரவணனின் படம் இத்தனை மொழிகளில் வெளியாகிறதா? என்று வாயடைத்துப் போயுள்ளனர். ரசிகர்கள் பலரும் லெஜண்ட் சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
legend saravanan, the legend saravanan, legend saravanan movie updates, லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவ்தெலா, லெஜன் சரவணன் 5 மொழிகளில் வெளியாகிறது, தமிழ் சினிமா செய்திகள், actress Urvashi Rautela legend gives legend saravana movie updates, legend saravanan will release in 5 languages, tamil cinema news, actress Urvashi Rautela

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகிவரும் முதல் படமே பல மொழிகளில் வெளியாவதாக அப்படத்தின் ஹீரோயின் ஊர்வசி ரவ்தெலா தெரிவித்துள்ளார். இதனால், தி லெஜண்ட் சரவணனின் முதல் படமே இத்தனை மொழிகளில் வெளியாகிறதா என்று நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

Advertisment

லெஜண்ட் சரவணன், அவருடைய தி லெஜண்ட் சரவணன் ஜவுளி கடை விளம்பரத்துக்கு நடிகைகளுடன் நடித்தபோது பலரும் உருவ கேலி செய்தபோது அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய தயாரிப்பில் சினிமாவில் நடிப்பதாக அறிவித்தார். அவருடைய புதிய படத்தை இரட்டை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகிறார்கள். இவர்கள் ஏற்கனவே பல விளம்பரப் படங்களையும் உல்லாசம், விசில் போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளனர்.

இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் உடன் யோகிபாபு, ரோபோ ஷங்கர், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அதே போல, இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா நடிக்கிறார். லெஜண்ட் சரவணன் படத்தில் நடிப்பதன் மூலம் ஊர்வசி ரவ்தெலா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

கொரோனா தொற்று பரவல் பொதுமுடக்கம் காரணமாக மெதுவாக நடந்துவந்த இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியாமல் இருந்த நிலையில், ஊர்வசி ரவ்தெலா படத்தைப் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார்.

நடிகை ஊர்வசி ரவ்தெலா, சென்னையில் நடைபெற்று வந்த லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், லெஜண்ட் சரவணனின் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக ஊர்வசி ரவ்தெலா தெரிவித்துள்ளார். இதனால், நெட்டிசன்கள் பலரும் லெஜண்ட் சரவணனின் படம் இத்தனை மொழிகளில் வெளியாகிறதா? என்று வாயடைத்துப் போயுள்ளனர். ரசிகர்கள் பலரும் லெஜண்ட் சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment