Advertisment

விக்ரம், லியோ... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்ற இயக்குனர்களிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகிறார்?

2005-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான எ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ் என்ற படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் குறை வைக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களின் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்று அவரது படங்களின் ஹீரோக்கள் பற்றிய ஆழமான புரிதல்.

ஆங்கிலத்தில் படிக்க : Leo and beyond, Lokesh Kanagaraj isn’t just another mass movie director: Why his worlds appear more alluring than his peers

Advertisment

இன்றைய காலக்கட்டத்தில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறுகிய காலத்தில் தனது படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற இவரது படங்களுக்கு எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விஜயின் லியோ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. 

2005-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான எ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ் என்ற படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் குறை வைக்கவில்லை. டேவிட் க்ரோனன்பெர்க்கின் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் (2005) படத்தில் தனது ஷாப்புக்கு வந்து பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற 2 தேடப்படும் குற்றவாளிகளை சுட்டுக் கொன்ற பிறகு, டாம் ஸ்டால் (விகோ மோர்டென்சன்) முகம் வெளியில் தெரியவருகிறது. இதனால் அவர் பதட்டமாகத் இருக்கிறார். அவரது செயல்களின் சாத்தியமான விளைவுகளைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கும் டாம் ஸ்டால், இந்த சம்பவத்தின் மூலம் அவரது கடந்த கடந்த காலத்தின் சம்பவங்கள் மீண்டும் எழும் என்று அவருக்கு தெரியும்.

அதன்படியே கடந்த கால பிரச்சனைகள் வரும்போது, அதை திறம்பட சாமாளித்து வெளியில் வருவது தான் கதை. அதற்கு நேர்மாறாக, லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் பார்த்திபன் (விஜய்) இதேபோன்ற சூழ்நிலையில் தான் சிலரை கொன்றுவிட்டதால் கண்ணீர் விடுகிறார். லியோ இறந்துவிட்டதாக தனக்குள் எண்ணிக்கொண்டிருந்த பார்த்திபனுக்கு, அவருக்குள் லியோ உயிருடன் இருப்பதைப் படிப்படியாக உணர்ந்து அந்த நபரை அழிக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்கிறார். ஆனாலும், லியோ அவரிடம் இருந்து உண்மையில் மறைந்துவிடாது என்பதை அவர் புரிந்துகொள்கிறார்.

லோகேஷ் கனகராஜ், லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள், லோகேஷ் கனகராஜ் எல்சியு, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் பட்டியல், லோகேஷ் கனகராஜ் லியோ, லியோ, லியோ திரைப்படம், விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம், தளபதி விஜய், கமல்ஹாசன், கார்த்தி, தமிழ் திரைப்படங்கள், தமிழ், தமிழ் திரைப்படங்கள் 202 , தமிழ் சினிமா

இந்த மாற்றம் சிறியதாக இருக்கிறது என்று நமக்கு தோன்றினாலும், டாம் ஸ்டால் மற்றும் பார்த்திபன் கதாபாத்திரங்களை பற்றி கூறுவதற்கும் அந்த இரு கேரக்டர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எடுத்துக்காட்டுவதற்கும் இந்த தருணம் முக்கிய பங்கு வகிக்கிறது. க்ரோனன்பெர்க்கின் கதாநாயகன் தனது புதிய உலகத்தை கட்டியெழுப்பிய அதே வேளையில், அங்கிருந்து விலகி தனக்கு கிடைத்த புதிய பெயருடன் புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதே சமயம் லோகேஷ் கனகராஜின் ஹீரோ பார்த்திபன் தனது உலகத்தை உன்னிப்பாக வடிவமைத்து, அதற்கான ஆதாரங்களையும் உருவாக்குகிறார். எந்த நிலையிலும் தான் லியோ என்பது யாருக்கும் வெளிகாட்டிவிட கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பது இதில் தெரிகிறது.  அதேசமயம் டாம் ஸ்டால் எப்போதும் தனது உண்மையான அடையாளம் வெளிப்படாது என்று நம்பிக்கையுடன் இருப்பார்.

லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களின் வசீகரிக்கும் அம்சங்களில் ஒன்று அவரது ஹீரோ கேரக்டர்கள். குறிப்பாக அவரது படங்களில் ஹீரோக்கள் பற்றிய ஆழமான புரிதல் பெரிய அளவில் பிரதிபலிக்கும். அவரது படங்கள் வன்முறையை ஊக்குவிக்கிறது. பெண் கதாபாத்திரங்களுக்கு அரிதாகவே இடம் கொடுக்கின்றன என்ற நிலையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், லோகேஷ் கனகராஜ் தற்போது இந்தியாவின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக நிற்கிறார். இதேபோன்ற அந்தஸ்தைப் பெற்ற அவரது பல சக இயக்குனர்களை போல், லோகேஷின் புகழ் வெறும் கார்கள், பழமையான செட்கள், மனிதநேயமற்ற உளவாளிகள், வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்வதிலிருந்து உருவானது அல்ல. மாறாக, அவரது நான்லீனியர் ஸ்டோரி டெல்லிங், மற்றும் தனித்துவமான திரைப்படம் இயக்கும் பாணி ஆகியவை அவரை பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

காயமடைந்த மாவீரர்கள்

இவரது படங்களில் வழக்கமான (காயமடைந்த) ஹீரோக்களைப் போலல்லாமல், அவர்கள் பெரும்பாலும் தவறான அமைப்பு அல்லது சிக்கலான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள், லோகேஷின் கதாநாயகர்கள் தங்கள் சொந்த செயல்கள் அல்லது அதன் விளைவுகளால் ஏற்படும் வருத்தத்துடன் போராடுவது போலத்தான் காட்டப்பட்டிருப்பார்கள். மாநகரம் படத்தில் ஸ்ரீயின் கதாபாத்திரம், சென்னைக்கு வந்து, தன் வாழ்க்கை தடுமாறிக்கொண்டிருக்கும்போது, எதுவும் செய்ய முடியாமல் தன் மீது கோபத்தில் இருக்கும், கைதி படத்தில் டில்லி (கார்த்தி) தன் மகளுடன் இருக்கும் வாய்ப்பை இழந்ததற்காக வருந்துகிறார், அதேசமயம் விக்ரம் (கமல்ஹாசன்) ) தனது மகனுக்காக அங்கு இல்லாததற்காகவும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க முடியாமல் போனதற்காகவும் வருந்துகிறார். இது இறுதியில் அவரது மகனின் மரணத்திற்கு வழிவகுத்தது.

விக்ரமில் அமர் (ஃபஹத் பாசில்) கூட கோஸ்டின் பொருத்தத்தை உணர்ந்து, தன் மனைவியின் (காயத்ரி சங்கர்) கொடூரமான கொலையைத் தடுக்க முடியாமல் தானும் அவருடன் விடுகிறார். ஆரம்பத்தில் பொறுப்பற்றவராக சித்தரிக்கப்பட்ட ஜான் துரைராஜ் அல்லது மாஸ்டரில் ஜேடி (விஜய்) சிறையில் இரண்டு குழந்தைகளின் கொலையைத் தடுத்திருக்க முடியும் என்பதை உணர்ந்ததும் வருத்தத்தால் பாதிக்கப்படுகிறார். மறுபுறம், லியோ தனது மறைந்த சகோதரி எலிசாவின் (மடோனா செபாஸ்டியன்) நினைவுகளால் பறிதவிக்கிறார். பார்த்திபனின் கடந்தகால நடத்தையின் மீதான அதிருப்தியின் காரணமாக இந்த நிரந்தரமான பேயாட்டம் அவரை ஆழமாக தொந்தரவு செய்கிறது.

இருப்பினும், இந்த கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஒன்றிணைப்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மிகவும் அர்த்தமுள்ள ஒன்றைப் பின்தொடர்வது. அவர்கள் தனிப்பட்ட சுர்ழ்நிலைகளல் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் செயல்களின் விளைவுகளைப் பற்றி அறிந்திருந்தாலும், இந்த ஹீரோக்கள் யாரும் வாய்ப்புகள் வரும்போது பதிலடி கொடுப்பதில்லை. மாறாக, அவர்கள் தங்கள் போட்டியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மூல காரணத்தை களையெடுப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் அல்லது ஒரு பெரிய நோக்கத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ், லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள், லோகேஷ் கனகராஜ் எல்சியு, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் பட்டியல், லோகேஷ் கனகராஜ் லியோ, லியோ, லியோ திரைப்படம், விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம், தளபதி விஜய், கமல்ஹாசன், கார்த்தி, தமிழ் திரைப்படங்கள், தமிழ், தமிழ் திரைப்படங்கள் 202 , தமிழ் சினிமா

மாநகரத்தில் வரும் கதாநாயகன், நகரம் தவறில்லை என்பதை படிப்படியாகப் புரிந்து கொள்ளும்போது, புரட்சி வீட்டிலும் தனக்குள்ளும் தொடங்குகிறது என்பதை அவர் உணருகிறார். டில்லியின் முக்கிய குறிக்கோள் அவரது மகளுடன் மீண்டும் இணைவதாக இருந்தாலும், அவரது நோக்கங்களும் ஒரு பெரிய சம்பவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது பின்னர் தெரியவந்துள்ளது. ஜே.டி. பவானியை (விஜய் சேதுபதி) ஒழிப்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, ஆனால் சட்டத்துடன் முரண்படும் குழந்தைகளுக்கு சிறந்த சூழலை உருவாக்குவதிலும் உள்ளது. விக்ரம் படத்தில் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலிருந்தே விக்ரமின் நோக்கங்கள் தெளிவாகத் தெரிந்தாலும், பார்த்திபன் தனது குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்வதை உள்ளடக்கிய ஒரு தனிப்பட்ட காரணத்திற்காகப் பாடுபடுகிறார், இறுதியில் ஏஜெண்ட் விக்ரமிடமிருந்து போன் வரும்போது அதுவும் பெரிதாகிறது.

போட்டியாளர்களை விட மிகவும் ஆபத்தானவர்கள் யார்?

லோகேஷின் ஹீரோக்கள் ஆக்‌ஷன்களில் வழக்கமான ஆண் கதாநாயகர்களுக்கு மாறாக மிகவும் அடக்கமான வாழ்க்கையை நடத்த முயற்சித்தாலும், பார்வையாளர்களுக்கு, குறிப்பாக ஆண்களுக்கு அவரது திரைப்படங்களின் ஈர்ப்பு, ஹீரோக்களின் திறன்களைப் பற்றிய அவர்களின் விழிப்புணர்வில் உள்ளது. வில்லன்கள் அலட்சியமாக இருந்தாலும், ஹீரோக்கள் எந்த அளவிற்கு தங்கள் உள் வலிமையை வெளிக்கொணர முடியும் என்பது பற்றி பார்வையாளர்கள் ஏற்கனவே நன்கு அறிந்திருக்கிறார்கள். அன்பு (அர்ஜுன் தாஸ்), பவானி மற்றும் சந்தனம் (விஜய் சேதுபதி) ஆகியோர் தங்கள் போட்டியாளர்களின் முழு பலத்தையும் புரிந்துகொள்வது க்ளைமாக்ஸை நோக்கியிருந்தாலும், ஏற்கனவே இதைப் பற்றிய பார்வையைப் ரசிகர்கள் தெரிந்துகொள்ளும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தில் அண்ணன் கார்ல் ஃபோகார்டியிடம் (எட் ஹாரிஸ்) ஃபோகார்டி அவரைச் சுடத் தயாராகும் போது, ஸ்டால் அதை உடனடியாக செய்து முடித்துவிடுவார். அதேபோல் பார்த்திபன் தான் லியோ என்ற உண்மையை வெளிப்படுத்திய பிறகு, ஹரோல்ட் தாஸிடம் (அர்ஜுன்) அன்னைக்கே நான் உன்னை கொன்றிருக்க வேண்டும் என்று சொல்வார். ஹரோல்ட் "எலிசாவின் மரணத்திற்குப் பொறுப்பாளியாக" இருந்தபோதிலும், அவரது முழுமையான முழுமையான பலத்தை நினைத்து லியோ தாஸ் தனது சித்தப்பா ஹரோல்ட் தாஸை முன்பு காப்பாற்றியது இதில் தெரிகிறது.

போதைப்பொருள் மற்றும் வன்முறைக்கு எதிர்ப்பு,

வன்முறைக் காட்சிகள் மீதான பார்வையாளர்களின் ஈர்ப்பு, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அதிரடித் திரைப்படம் வெளியாகும் போது தொடர்ந்து விவாதத்தை எழுப்பி வருகிறது. லோகேஷின் முதல் திரைப்படமாக மாநகரம் படத்தை தவி மற்ற 4 படங்களிலும் இதே நிலை தொடர்ந்து வருகிறது. மறுபுறம், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை ஊக்குவிக்க அவரது கதாநாயகர்கள் முயற்சித்த போதிலும், லோகேஷ் போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

லோகேஷ் கனகராஜ், லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள், லோகேஷ் கனகராஜ் எல்சியு, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் பட்டியல், லோகேஷ் கனகராஜ் லியோ, லியோ, லியோ திரைப்படம், விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம், தளபதி விஜய், கமல்ஹாசன், கார்த்தி, தமிழ் திரைப்படங்கள், தமிழ், தமிழ் திரைப்படங்கள் 202 , தமிழ் சினிமா

இது குறித்து பதில் அளித்த அவர், சில பார்வையாளர்கள் திரையில் வன்முறையை ரசிப்பதாகக் குறிப்பிட்டு, இந்தக் குறிப்பிட்ட விமர்சனங்கள் குறித்து தான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட லோகேஷ், ஒரு குறிப்பிட்ட போதைப்பொருளை உட்கொள்வது நாடு வல்லரசாக மாறும் என்று தனது படங்கள் உணர்த்தியிருந்தால், அது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறியிருந்தார். மேலும் அவரது அனைத்து கதாபாத்திரங்களும் போதைப்பொருள் இல்லாத சமூகத்திற்காக பாடுபடுகின்றன, போதைப்பொருளின் யதார்த்தத்தை சித்தரிப்பது அவசியம். மேலும், தனது படங்கள் வன்முறையாகக் கருதப்படக் கூடாது, மாறாக உலகளவில் நடைமுறையில் இருக்கும் அதிரடி வகையின் கீழ் வரும் ஒரு படம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியப் பார்வையாளர்களிடையே போதைப்பொருள் மற்றும் வன்முறையை திரையில் சத்தறிப்பது காலம் காலமாக தொடர்நச்து வரும் நிலையில், அந்த படங்கள் வெற்றி பெற்று வருவதாக கூறியுள்ள நிலையில், லோகேஷ் திரைப்படங்களில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றுள்ளன. கூடுதலாக, ஹீரோக்களின் நல்ல நோக்கத்துடன் கூடிய இயல்பு அவர்களை எளிதில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறது. "ஒரு மனிதனின் பயங்கரவாதம் மற்றொரு மனிதனின் புரட்சி" என்று விக்ரம் படத்தில் மேற்கோள் காட்டுகிறார்.

வில்லன்கள்

லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களின் வசீகரத்தை அதிகரிக்கும் மற்றொரு காரணி என்னவென்றால், அவை பெரும்பாலான இந்திய படங்களுக்கு மாறாக, அவரது படங்களில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்களின் கொண்டாட்டங்கள் அல்ல. உண்மையில், அவரது திரைப்படங்கள் மாஸ்டர் மற்றும் (ஓரளவுக்கு) விக்ரம் மட்டுமே விதிவிலக்குகளுடன், மையக் கதாபாத்திரங்களைப் சுற்றி நகரும். மாநகரம் நகரம் மற்றும் அதன் குடிமக்கள் இரண்டையும் பற்றி சொல்லும். அதே வேளையில், கைதி மற்றும் லியோ அவர்களின் முக்கிய கதாபாத்திரங்களை முழுமையாக ஆராய்வது போல் அமைந்திருக்கும். இதனால்தான் லோகேஷின் வில்லன்கள் மிகவும் வலிமையானவர்களாக வருகிறார்கள். மாநகரத்தில் கூட, வில்லன்கள் பெரும்பாலும் பயத்தை வெளிப்படுத்தினாலும், ஸ்ரீ அல்லது சந்தீப் கிஷனின் கதாபாத்திரங்கள் போன்ற பாதிப்பின் தருணங்களில் நாம் அவர்களைப் பார்ப்பதில்லை என்பதால், வில்லன்கள் எந்த அளவிற்குப் போவார்கள் என்று ரசிகர்களுக்குத் தெரியவில்லை.

லோகேஷ் கனகராஜ், லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள், லோகேஷ் கனகராஜ் எல்சியு, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் பட்டியல், லோகேஷ் கனகராஜ் லியோ, லியோ, லியோ திரைப்படம், விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம், தளபதி விஜய், கமல்ஹாசன், கார்த்தி, தமிழ் திரைப்படங்கள், தமிழ், தமிழ் திரைப்படங்கள் 202 , தமிழ் சினிமா

கைதியில் இருந்து வில்லன்களிடம் இந்த நிரந்தர பய உணர்வு குறைகிறது, இதன் விளைவாக, அடைக்கலம் (ஹரிஷ் உத்தமன்), அன்பு, பவானி, சந்தனம், ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்) மற்றும் ஹரோல்ட் தாஸ் (அர்ஜூன்) ஆகியோர் ஹீரோக்களை விட பெரியவர்களாகவும் திறமையானவர்களாகவும் தோன்றுகிறார்கள், இந்த எல்லா வில்லன்களின் கலவையும் ரோலக்ஸ் (சூர்யா).என்பது தீமையின் உச்சம்.

அதேபோல் லோகேஷின் படங்கள் முன்னணி நட்சத்திரங்களுக்கு தக்க வகையில் அதிகமான பாடல்கள், அவரது ரசிகர்களுக்கான காட்சிகள் என எதுவும் அதிகம் இருக்காது. இதனால் தான் முக்கிய இயக்குநர்களில் லோகேஷ் தனித்து நிற்கிறார். மாறாக, அவரது படங்களின் கதை மற்றும் திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும். ஆனால் லோகேஷ் சிக்னேச்சர் ஸ்டைலில் இருந்து விலகி, விஜய்யின் நட்சத்திரத்தை முதன்மைப்படுத்தியதற்காக மாஸ்டர் படம் விமர்சனத்தை எதிர்கொண்டபோது, லியோவில், விஜய்யின் இதுவரை காணாத பக்கத்தை முன்வைத்து, அதே நடிகருடன் இந்த சிக்கலை சரிசெய்தார் லோகேஷ்.

அவரது படங்களில் உச்சத்தை உருவாக்குவதால், லோகேஷின் படைப்புகள் மீண்டும் மீண்டும் பார்க்கும்போதும் அல்லது OTT தளங்களில் ஸ்ட்ரீம் செய்யும்போதும் தங்கள் எதிர்பார்ப்பை தக்கவைத்துக்கொள்கின்றன.  லியோவில் தளபதி விஜய்யின் மார்வெல்-ஈர்க்கப்பட்ட டைட்டில் கார்டு, அவரது கண்களின் மிக நெருக்கமான காட்சிகளைக் கொண்டு இது எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், ஹீரோ மற்றும் வில்லன்களின் உலகங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள், கதையின் இயல்பான முன்னேற்றத்தை சீர்குலைக்காமல், அவர்களின் செயல்கள் மற்றும் சக்தியின் காட்சிகளை தொடர்ந்து வழங்குவதன் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லோகேஷ் கனகராஜ், லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள், லோகேஷ் கனகராஜ் எல்சியு, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் பட்டியல், லோகேஷ் கனகராஜ் லியோ, லியோ, லியோ திரைப்படம், விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம், தளபதி விஜய், கமல்ஹாசன், கார்த்தி, தமிழ் திரைப்படங்கள், தமிழ், தமிழ் திரைப்படங்கள் 202 , தமிழ் சினிமா

ஈஸ்டர் எக்ஸ், அஞ்சலிகள் மற்றும் உத்வேகங்கள்

லோகேஷ் கனகராஜ் பெரிதும் போற்றும் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் குவென்டின் டரான்டினோவைப் போலவே, லோகேஷ் தனது திரைப்படங்களில் ஏராளமான ஈஸ்டர் எக்ஸ்களை இணைத்து, கடந்த காலத்தின் பல்வேறு மரியாதைக்குரிய படைப்புகளின் சின்னமான தருணங்களுக்கு மரியாதை செலுத்துகிறார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ், அவரது அனைத்து படங்களிலும் நடிகரின் முந்தைய பலவற்றை பயன்படுத்தியிருப்பார். விருமாண்டியின் (2004) காட்சிகள் கைதி படத்திலும், நம்மவர் (1994) இலிருந்து மாஸ்டர் படத்திலும் ஒருவாக்கி இருப்பார். அதேபோல், கமல் நடித்த விக்ரம், அதே பெயரில் 1986 ஆம் ஆண்டு வெளியான உளவு திரைப்படத்தின் 2-ம் பாகமாகும். மறுபுறம், லியோவில், லோகேஷ் 1982 ஆம் ஆண்டு கிளாசிக் படமான மூன்றாம் பிறைக்கு அஞ்சலி செலுத்ததும் வகையில், பார்த்திபன் ஹைனாவுக்கு சுப்ரமணிஎன்று பெயர் சூட்டினார்.

லோகேஷ் கனகராஜ், லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள், லோகேஷ் கனகராஜ் எல்சியு, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் பட்டியல், லோகேஷ் கனகராஜ் லியோ, லியோ, லியோ திரைப்படம், விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம், தளபதி விஜய், கமல்ஹாசன், கார்த்தி, தமிழ் திரைப்படங்கள், தமிழ், தமிழ் திரைப்படங்கள் 202 , தமிழ் சினிமா

இந்த நேரடி (கமல்) குறிப்புகளுக்கு அப்பால், லோகேஷின படங்களில் பழைய பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கைதி படம் டை ஹார்டில் இருந்தும், விக்ரம் கிறிஸ்டோபர் நோலனின் தி டார்க் நைட் ட்ரைலாஜியின் மனநிலையையும் சில தருணங்களையும் காட்டுகிறது. இறுதிக் காட்சியில் கமல் தனது இளம் பேரனை ஒரு காபி ஷாப்பில் சந்திக்கிறார், தி டார்க் நைட் ரைசஸில் (2012) பென்னிவொர்த் படத்தின் இறுதியில் இதே போன்ற காட்சி இருக்கும்

லோகேஷ் கனகராஜ், லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள், லோகேஷ் கனகராஜ் எல்சியு, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் பட்டியல், லோகேஷ் கனகராஜ் லியோ, லியோ, லியோ திரைப்படம், விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம், தளபதி விஜய், கமல்ஹாசன், கார்த்தி, தமிழ் திரைப்படங்கள், தமிழ், தமிழ் திரைப்படங்கள் 202 , தமிழ் சினிமா

மாஸ்டர் மற்றும் லியோ இரண்டிலும், பாடல்கள் உட்பட சின்னச் சின்ன செயல்கள் மற்றும் தருணங்களை உள்ளடக்கிய விஜய்யின் பல முந்தைய திரைப்படங்கள் அஞ்சலி செலுத்துகின்றன. கூடுதலாக, படத்தில் விஜய்யின் சின்னமான ரஷ்ய ரவுலட் காட்சிகள் பல்வேறு வெளிநாட்டு படங்களால் ஈர்க்கப்பட்டதாக லோகேஷ் சமீபத்தில் ஒப்புக்கொண்டார்.

லோகேஷ் கனகராஜ், லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள், லோகேஷ் கனகராஜ் எல்சியு, லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் பட்டியல், லோகேஷ் கனகராஜ் லியோ, லியோ, லியோ திரைப்படம், விக்ரம், கைதி, மாஸ்டர், மாநகரம், தளபதி விஜய், கமல்ஹாசன், கார்த்தி, தமிழ் திரைப்படங்கள், தமிழ், தமிழ் திரைப்படங்கள் 202 , தமிழ் சினிமா

மறுபுறம், திரைப்படங்களை லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸுக்கு (LCU) வழிவகுப்பது, கடத்தல் பார்சல்களில் உள்ள தேள் சின்னம் போன்ற விவேகமான அடையாளங்களை பயன்படுத்தி, கோஸ்ட் என்ற கதாபாத்திரத்தைப் பற்றிய குறிப்புகள் மற்றும் அடிக்கடி குறிப்பிடும் அனாதை இல்லங்கள், பார்வையாளர்களை அவரது படங்களில் மீண்டும் மீண்டும் இதே போன்ற காட்சிகளை வைக்க  ஊக்குவிக்கிறது, அவற்றைப் பற்றிய விவாதங்களை நிரந்தரமாக்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lokesh Kanagaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment