லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டீயோ அறிவித்துள்ளது. இந்நிலையில் இது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் லியோ. இது அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜூன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளீட்டு விழா மலேசியாவில் நடக்கும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற அனுமதி கேட்டதாகவும், சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் படத்தை விநியோகம் செய்யும் அனுமதி வழங்கினால்தான், இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதி வழங்குவோம் என்று ரெட் ஜெயண்ட் மூவீஸ் மற்றும் திமுக குடும்பத்தினர் தெரிவித்ததாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தகவல் வெளியிட்டார்.
இந்த தகவலில் உண்மையில்லை என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டீயோ மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் தற்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என செவன் ஸ்க்ரீன் ஸ்டீயோ அறிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில் “ பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டும் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பதுக்கு ஏற்ப அடிக்கடி அப்டேட் வெளியிடுவோம். ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தாதது பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களாலோ அல்லது வேறு காரணங்கலாலோ அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“