/indian-express-tamil/media/media_files/9KSafBndTl4Zx7MRK3NP.jpg)
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ விளக்கம்
லியோ இசை வெளியீட்டு விழா வருகின்ற 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று செவன்ஸ்கிரீன்ஸ்டுடியோ மறுத்துள்ளது.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்களில் உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தீவிர எதிர்பார்ப்பு ஏற்படுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடக்க இருப்பதாக முன்பு கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாகவும், அதற்கான அனுமதி கேட்கப்பட்டது என்று அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார்.
Sir, this is to clarify that this news is not true.. https://t.co/3qF7hBiviQ
— Seven Screen Studio (@7screenstudio) September 23, 2023
மேலும் ரெட் ஜெயட் நிறுவனம், யோ திரைப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு உள்ளிட்டஇடங்களில் விநியோகிக்கும் உரிமைகளை கொடுத்தால் மட்டுமே, அனுமதி வழங்கப்படும் என்று கூறியதாக சவுக்கு சங்கர் அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன்ஸ்கிரீன்ஸ்டுடியோ நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. செவன்ஸ்கிரீன்ஸ்டுடியோ அதன் எக்ஸ் தளத்தில் “ சார், இந்த செய்தியில் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.