ஆங்கிலத்தில் படிக்க...
தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் நாள் அட்வான்ஸ் கலெக்ஷன் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் நடிப்பில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், லியோ படம் இந்த வாரம் தமிழ்த் திரையுலகில் சாதனை படைக்க உள்ளது.
தற்போதுவரை ரூ. 70 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவு நடந்துள்ளதாக , இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் படத்தின் முன்பதிவு குறித்த விபரங்களை வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவித்துள்ளார். லியோ ஏற்கனவே முதல் நாள் ரூ 34 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் சுமார் 18 கோடி ரூபாய் அட்வான்ஸ் வியாபாரம் செய்ததாக சாக்னில்க் தெரிவித்துள்ளது.
லியோ வழக்கமான தமிழ் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை ரூ. 29 கோடிக்கு விற்றுள்ளது, அதே சமயம் பிரீமியம் ஐமேக்ஸ் வடிவில் உள்ள திரையரங்குகளில் ஏற்கனவே சுமார் ரூ.7 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. படத்தில் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் தெலுங்கில் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் மற்றும் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி உள்ளிட்ட படங்கள் வெளியானாலும், லியோ தெலுங்கு பதிப்பிற்கு சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக சாக்னில்க் தெரிவித்துள்ளது.
மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்ட வெளியீட்டிற்கான முன்பதிவு விபரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், லியோ கேரளாவில் ஒரு சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஹிந்தி மார்க்கெட்டில் லியோ இதுவரை சுமார் 32 லட்ச ரூபாய்க்கு மிகக் குறைவான அட்வான்ஸ் விற்பனையை மட்டுமே செய்துள்ளது. உண்மையில், தமிழ் மொழி வெளியீட்டிற்காக டெல்லி-என்சிஆர் மற்றும் மும்பை பிராந்தியத்தில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இந்தி பதிப்பிற்காக அதே பிராந்தியங்களில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள முன்பண டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு சவால் விடக்கூடிய விஜய் லியோ படத்தின் மூலம் காலடி வைத்துள்ளார். ஆனாலும் பாலிவுட்டில், ஷாருக்கானின் ஜவான் தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பதிப்புகளில் 60 கோடி ரூபாய்க்கு வசூல் செய்ய முடிந்தது, அதே நேரத்தில் கடந்த ஆண்டு தெலுங்கு மற்றும் கன்னட பிளாக்பஸ்டர்களான ஆர்ஆர்ஆர் கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா ஆகியவை பாலிவுட்டிலும் வசூலில் சாதனை படைத்து.
லோகேஷ் கனகராஜின் எல்சியூ படங்களின் ஒரு பகுதியாக லியோ இருப்பதாகக் கூறப்படுகிறது, தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களின் ஈடுபாட்டுடன் லோகேஷ் தனது சினிமா பிரபஞ்சத்தை எவ்வாறு தொடர்வார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“