Advertisment
Presenting Partner
Desktop GIF

லியோ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் : பிரம்மாண்ட ஓப்பனிங்... உலகம் முழுவதும் ரூ.145 கோடி வசூலாக வாய்ப்பு

விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள லியோ திரைப்படம் 2023-ம் ஆண்டில் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற தமிழ் திரைப்படமாக மாற உள்ளது

author-image
WebDesk
New Update
Leo Vijay Box office

விஜய் நடித்துள்ள லியோ படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற தமிழ் படமாக மாற உள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க : Leo box office collection Day 1 early reports: Vijay’s film poised to beat Rajinikanth’s Jailer, record Tamil opening seems guaranteed

Advertisment

பல சிக்கல்களை கடந்து தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த ஆரம்ப தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரிலீஸ்க்கு முன்பாக பல சிக்கல்கள் இருந்தாலும் திட்டமிட்டபடி இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இதனிடையே படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் லியோ படம் ரூ.32 கோடியும், கேரளாவில் ரூ.12.50 கோடியும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் ரூ.17 கோடி வசூல் செய்யும் என்றும், கர்நாடகாவில் ரூ.14.5 கோடி வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 86.35% சதவீதம் தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகியுள்ள நிலையில் சென்னையில் கிட்டத்தட்ட 1176 காட்சிகளைக் கொண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் மொத்த வசூல் சுமார் ரூ.80 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் உலகம் முழுவதும் ரூ.145 கோடி வரை வசூலாகும். இது குறித்து வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, லியோ படம் முதல் நாளிலேயே இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்யும் என்று முன்னரே கணித்திருந்தார். இந்தியாவில், முதல் நாளில் 70 கோடி ரூபாய் வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக நான் கணிக்கிறேன். உலகளவில், தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில், தொடக்க நாளில் ரூ.100 கோடி வசூலிக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியிருந்தார்.

லியோ இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் படமாக மாறக்கூடும். ஆனால் படம் ஹிந்தி வட்டாரத்தில் பெரிய அளவில் வெளியாகவில்லை. படத்தின் ஒடிடி வெளியீடு காரணமாக வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ்கள் லியோ படத்தை வெளியிடவில்லை. தமிழ்நாடு திரைப்பட சங்கம் தற்போது படம் வெளியான 4 வாரங்களில் ஒடிடி தளத்தில் வெளியாகலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால் பாலிவுட் சினிமாவில் படம் வெளியானி 8 வாரங்களுக்கு பிறகுதான் ஒடிடியில் வெளியிட வேண்டும். அதனால் தான் லியோ வட இந்தியாவில் வெளியாகவில்லை.

விஜய் கடைசியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான வாரிசு படம் முதல் நாளில் ரூ 26.5 கோடி வசூலித்தது, அதே நாளில் வந்த அஜித்தின் துணிவு படம் 26 கோடி வசூல் செய்தது. வாரிசு உலகளவில் ரூ.297.55 கோடி வசூல் செய்து வசூல் சாதனை படைத்தது. லியோ படத்திற்கு அதிகாலை காட்சிகள் ஏதுமில்லாமல், தெலுங்கு டப்பிங் பதிப்பிற்கான தாமதமான வெளியீடு, என இதுவரை கடினமான பயணத்தை மேற்கொண்டுள்ளது. படத்தின் வழக்கமான ஆடியோ வெளியீட்டு விழா இல்லை, அதனால், விஜய்யின் ரசிகர்கள் அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பை இழந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய, லியோ படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர், மேலும் விக்ரம் மற்றும் கைதி ஆகிய படங்களை உள்ளடக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூன் சினிமா பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Actor Vijay Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment