விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், 2 வாரங்கள் முடிவில் லியோ படத்தின் முழு வசூல் விபரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் லியோ. சஞ்சய் தத், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கௌதம் மேனன் உட்பட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த அக்டோபர் 19-ந்’ தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது.
முதல் நாள் வசூலில் சாதனை படைத்த லியோ திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் கலவையான விமர்சனங்கள் காரணமாக வரவேற்பு குறைந்தாலும், படத்தின் வசூல் நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியாகி 2-வது ஞாயிற்றுகிழமை, (நேற்று) லியோ படம் மிகப்பெரிய வசூலைப் பதிவு செய்ததால், பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது. இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் கூற்றுப்படி, லியோ படம் 11வது நாளில் 16.50 கோடி ரூபாய் வசூலித்தது.
இதன் மூலம், இந்தியாவில் லியோ படத்தின் மொத்த வசூல் நிலவரம் 303 கோடி ரூபாயாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலரின் (ரூ 348 கோடி) சாதனையை முறியடிக்கும் பாதையில் லியோ படம் நன்றாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் வலுவான முன்னேறிய நிலையில், இந்தியாவில் அதன் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை 19.2 கோடியுடன் லியோ படத்தை விட சிறப்பாக பதிவு செய்தது.
11 ஆம் நாளில், லியோ 40 சதவீதத்திற்கு மேல் ஆக்கிரமிப்பைக் கொண்டிருந்தது, மதியம் மற்றும் மாலை காட்சிகள் 60 சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டன. இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைக்கான வெளிநாட்டு வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை என்றாலும், இரண்டாவது சனிக்கிழமைக்குள் லியோ படம் உலகளவில் 508 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் உலகளவில் ரூ.604 கோடி வசூலித்து இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் ஹிட் படமாக உள்ளது. இந்த சாதனையை லியோ முறையடிக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் மற்றும் மிராஜ் போன்ற தேசிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திறக்கப்படாத இந்தி மார்க்கெட்டில் மல்டிபிளக்ஸ் ஆதரவின்றி விஜய் நடித்த திரைப்படம் அதன் இந்திய இந்திய பாக்ஸ்ஆபீஸில் வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“