ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் சாதனையை லியோ முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை உலகம் முழுவதிலும் ரூ.553 கோடி வசூல் செய்துள்ளது லியோ திரைப்படம்.
விஜய் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி 15 நாட்கள் கடந்துள்ளது. 2வது வாரம் என்பதால் வசூல் சற்று குறைந்துள்ளது. 15வது நாளன்று ரூ. 315.85 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில், லியோ திரைப்படத்திற்கு 638 காட்சிகள் திரையிடப்படுகிறது. இதுவரை உலகம் முழுவதிலும் ரூ. 553.7 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் ரூ. 604 கோடியை வசூலாக பெற்றது. இந்நிலையில் லியோ திரைப்படம் கூடுதலாக ரூ. 50.3 கோடி வசூல் செய்தால் ஜெயிலர் சாதனையை முறியடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் நாட்கள் இருப்பதால் இது நடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ திரைப்படம் பல்வேறு சவால்களை கடந்துதான் வெளிவந்துள்ளது. ஆடியோ வெளியீடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. மேலும் படத்தின் போஸ்டர் வெளியானபோது, விஜய் சிகிரெட் பிடித்தது பெரும் சர்ச்சை ஆனது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவில், நடிகர் விஜய் பேசியதாவது : “படத்தில் வரும் பாடலில் ’விரல் இடுக்குல நீ பற்றணும்னு’ எழுதியிருப்பார்கள். அதை பேனா என்று எடுத்துகொள்ளலாம். அதுபோல் ’பத்தாது பாட்டில்’ என்று எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் மதுபானம் என்று எடுத்துகொள்ள வேண்டும் கூழ் என்று எடுத்துகொள்ளலாம். படத்தை படமாக பார்க்க வேண்டும். படத்தில் கெட்டவர்கள், நல்லவர்களை சித்தரிக்க இதுபோன்று விஷயங்கள் செய்யப்படுகிறது. இது பற்றி உங்களுக்கே தெரியும் நான் சொல்ல வேண்டும் என்பதில்லை “ என்று அவர் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“