இளைய தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் இரண்டாவது வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இந்தத் தமிழ் ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படம் அக்.19ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. அது இரண்டாவது வாரத்தில் நுழைந்தபோது, தொடர்ந்து ரூ.2.15 கோடி முதல் ரூ.4.25 கோடி வரை வசூலித்தது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை (நவ.3) ரூ. 2.15 கோடி வசூலித்த லியோ, சனிக்கிழமையன்று சற்று சிறப்பான வசூலை எட்டியது. தற்போது ரூ.4 கோடி வசூல் செய்து, படத்தின் மொத்த வசூல் ரூ.323 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Leo box office collection day 17: Vijay’s film trails Rajinikanth’s Jailer by Rs 25 crore, film records slight uptick
மாஸ்டருக்குப் பிறகு விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இரண்டாவது படம் லியோ. இப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
2019 இல் வெளியான கார்த்தியின் கத்தி, 2022ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து இது லோகேஷ் சினிமா பிரபஞ்சத்தின் மூன்றாவது பாகமாகும்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் உள்நாட்டு வசூலில் பிரபாஸின் ஆதிபுருஷை விஞ்சி, இப்போது ரஜினிகாந்தின் ஜெயிலரின் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலை மிஞ்சும் வகையில் உள்ளது.
ஜெயிலர் இந்தியாவில் மொத்தம் ரூ.348.55 கோடியும், உலகம் முழுவதும் ரூ.604 கோடியும் வசூலித்த இருந்தது. அண்மையில் இந்தப் படத்தின் வெற்றிவிழா கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், “மன்னர்கள் கட்டளையிடுவார்கள்; தளபதிகள் செய்து முடிப்பார்கள். நீங்கள் எனது மன்னர்கள். நான் உங்கள் தளபதி என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“