Advertisment

Leo Box Office Collection: 3-வது ஞாயிற்றுக் கிழமை வசூலில் ஜெயிலரை விட லியோ கம்மி; 18 நாள் மொத்த வசூலில் அதிகம்

லியோ வெளியாகி, 3வது ஞாயிற்றுகிழமையை கடந்த நிலையில், இது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்பட வசூலைவிட குறைவாக பெற்றுள்ளது. ஆனால் 18வது நாளில் ஒட்டுமொத்தமாக பெற்ற வசூல், ஜெயிலர் வசூலை கடந்துள்ளது.

author-image
WebDesk
New Update
vas

லியோ வெளியாகி, 3வது ஞாயிற்றுகிழமையை கடந்த நிலையில், இது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்பட வசூலைவிட குறைவாக பெற்றுள்ளது. ஆனால் 18வது நாளில் ஒட்டுமொத்தமாக பெற்ற வசூல், ஜெயிலர் வசூலை கடந்துள்ளது.

Advertisment

லியோ திரைப்படம் கடந்த 19 அக்டோபர் வெளியானது. இது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் 18வது நாளில், இத்திரைப்படம் ரூ.4.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ரூ. 328.50 கோடியை திரைப்படம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லியோ திரைப்படத்தின் 3வது வார ஞாயிற்றுகிழமையின் வசூலை, ஜெயிலரோடு ஒப்பிட்டு பார்த்தால், குறைந்த வசூலைதான் லியோ பெற்றுள்ளது. இதே நாளில் ஜெயிலர் திரைப்படம் ரூ.7.9 கோடியை பெற்றது.

ஆனால் 18வது நாளின் ஒட்டுமொத்த வசூலின்படி ரூ. 316 கோடியை இந்தியா முழுவதிலும் லியோ பெற்றுள்ளது. இந்நிலையில் இது ஜெயிலர் வசூலைவிட அதிகம் என்பதால்,  இனி வரும் நாட்களில் ஜெயிலரின் வசூலை, இது கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதிலும் ஜெயிலர் திரைப்படம் ரூ.348.55 கோடியை பெற்றது.

ஞாயிற்றுகிழமையான நேற்று, 31 % இருக்கைகள் நிரம்பி இருந்தன. ஜெயிலரின் இந்திய வசூலை மட்டும் அல்ல உலகம் முழுவதிலும் பெற்ற வசூலின் அளவை கடக்க லியோ முயற்சிக்கிறது. உலகம் முழுவதும் ஜெயிலர் ரூ. 604 கோடியை பெற்றது. கடந்த சனிக்கிழமை வரை லியோ உலகம் முழுவதும் ரூ. 566 கோடி வசூல் செய்துள்ளது.  

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment