ஆங்கிலத்தில் படிக்க : Leo box office collection Day 19: Vijay’s film short of Rs 17 crore to beat Rajinikanth’s Jailer; earns Rs 2.25 cr on third Monday
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், படம் தற்போது 3-வது வாரத்த கடந்துள்ளது. அதன்படி மூன்றாவது திங்கட்கிழமை, இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் ஆரம்ப மதிப்பீட்டின்படி படம் ரூ 2.25 கோடி வசூலித்துள்ளது.
வெளியாகி 19 நாட்களுக்கு பிறகு லியோவின் மொத்த இந்திய பாக்ஸ்ஆபீஸ் வசூல் ரூ.331 கோடியாக பதிவாகியுள்ளது. லியோ படம் வெளியான நாளில் இருந்து ஒவ்வொரு நாளும்,ரஜினிகாந்தின் ஜெயிலரின் படத்தின் வசூலுடன் ஒப்பிட்டு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் படம் தியேட்டர்களில் ஓடும்போது இந்திய பாக்ஸ்ஆபீஸில் ரூ.348.55 கோடியை குவித்தது. ரஜினிகாந்த் ஜெயிலர் சாதனையை முறியடிக்க லியோ படத்திற்குஇன்னும் 17 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
அதேபோல் திங்கட்கிழமை (நவம்பர் 06), லியோ 15.57% தமிழ் ஆக்கிரமிப்பைப் பதிவுசெய்தது, இரவுக் காட்சிகள் அதிகபட்சமாக ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர். இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் விஜய்யின் இரண்டாவது பிளாக்பஸ்டரை லியோ குறிக்கிறது. நடிகர் அஜித்தின் துணிவுடன் இணைந்து பொங்கல் திருநாளில் வெளியான வாரிசு எனற வெற்றிப்படத்தை கொடுத்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது.
பிகில் (2019) படத்திற்குப் பிறகு ரூ.300 கோடியைத் தொட்ட விஜயின் இரண்டாவது படம் என்ற பெருமையைப் பெற்றது. மெர்சல் (சுமார் ரூ.250 கோடி), சர்கார் (சுமார் ரூ.250 கோடி), மாஸ்டர் (சுமார் ரூ.220 கோடி), மற்றும் பீஸ்ட் (சுமார் ரூ.210 கோடி) ஆகியவை விஜய்யின் மற்ற பெரிய வசூல் சாதனைகள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை வரை, லியோ உலகளவில் ரூ. 574 கோடி சம்பாதித்துள்ளது, ஜெயிலர் உலகம் முழுவதும் ரூ.604 கோடி வசூலித்துள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான லியோ படத்தில், சஞ்சய் தத், த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பைப் பெற்றாலும், விஜய்யின் நடிப்பைப் பாராட்டுவதில் அவர்கள் ஏகோபித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“