Advertisment

3 வாரங்களைக் கடந்தும் சென்னையில் 506 காட்சிகள்: லியோ வசூல் லேட்டஸ்ட் அப்டேட்

விஜய் நடித்த லியோ திரைப்படம் உலகம் முழுவதிலும் இதுவரை ரூ. 587 கோடி வசூல் பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
asw

விஜய் நடித்த லியோ திரைப்படம் உலகம் முழுவதிலும் இதுவரை ரூ. 587 கோடி வசூல் பெற்றுள்ளது.

Advertisment

லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. தற்போது 3 வாரங்களை கடந்துள்ளது. 22ம் நாளில் லியோ திரைப்படம் ரூ. 1.55 கோடி வசூலை பெற்றுள்ளது. இந்தியா முழுவதிலும் இதுவரை ரூ. 335.20 கோடி வசூலை பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் இதுவரை ரூ. 587 கோடி வசூலாகி உள்ளது. ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதிலும், ரூ. 604 கோடி வசூலை பெற்றது. இந்நிலையில் ஜெயிலரின் வசூலை முறியடிக்க லியோ ரூ. 17 கோடி அதிகமாக வசூல் செய்ய வேண்டும்.

3 வாரங்களை கடந்தும் லியோ திரைப்படம் சென்னையில் 506 காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஆனால் 15.12 % அளவில் மட்டுமே திரையரங்கில் கூட்டம் உள்ளது. ஜெயிலர் வசூல் சாதனையை லியோ நெருங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்ற படங்களின் பட்டியலில் லியோ மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. ரஜினியின் 2.0 திரைப்படம் முதல் இடத்தையும், ஜெயிலர் 2ம் இடத்தையும் பிடித்துள்ளது.

லியோ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் வெளியானது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் லோகேஷ் பேசுகையில், “ திரைப்படத்தை விஜய் பார்த்த போது என்னை இருக்கமாக அணைத்துக்கொண்டார். நல்ல நடிகரை இந்த படம் மூலம் நான் வெளியே கொண்டு வந்துள்ளேன். இன்று நாம் இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிக்கொண்டிருப்பதற்கு விஜய் என்ற மனிதர்தான் காரணம் “ என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment