Advertisment

Leo Box Office Collection Day 23: ரூ 50 லட்சம் மட்டுமே வசூல்; ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆதிக்கத்தால் அவுட் ஆன லியோ

நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்திற்குப் பிறகு விஜய்யின் படம் வசூலில் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Leo box office

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ஜிகர்தண்டா டபுள்எக்ஸுக்கு எதிராக போட்டியை எதிர்கொள்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியான கார்த்திக் சுப்புராஜூன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், விஜயின் லியோ படத்தின் வசூல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Leo box office collection Day 23: Vijay-starrer faces competition against Jigarthanda DoubleX, mints Rs 596.7 crore

விஜய் லோகேஷ் கனகதராஜ் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் புதிய சாதனை படைத்திருந்தது. கடந்த 3 வாரங்களுக்கு மேலாக பாக்ஸ்ஆபீஸ் வசூலில் நிலையான இடத்தை பெற்று வந்த லியோ தற்போது வீழு்ச்சியடைந்துள்ள நிலையில், 23வது நாளில் ரூ.50 மட்டுமே வசூலித்துள்ளதாக இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் படத்தின் இந்திய பாக்ஸ்ஆபீஸ் வசூல் ரூ.335.65 கோடியாக உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவம்பர் 10) கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியான பிறகு, லியோவுக்கு சென்னையில் 81 காட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளது. சென்னையில் லியோ திரைப்படம் நேற்று 35.33% ஆக்கிரமிப்பை மட்டுமே கண்டது. கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் நாளில் ரூ 1.61 கோடி வசூலித்துள்ளது.

இதன் மூலம் லியோவின் உலகளாவிய வசூல் தற்போது ரூ 596.7 கோடியாக உள்ளது. இது ரஜினிகாந்தின் ஜெயிலர் வசூல் ரூ 604 கோடியில் இருந்து சில கோடிகள் மட்டுமே வித்தியாசம். லியோ தற்போது ரஜினியின் 2.0 மற்றும் ஜெயிலர் படங்களுக்குப் பிறகு தமிழ் வசூலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thalapathy Vijay Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment