லியோ திரைப்படத்தின் வசூல் குறைய தொடங்கி உள்ளது. 4 வது சனிக்கிழமை முடிவில் லியோ திரைப்படம் ரூ. 90 லட்சம் வசூலை பெற்றுள்ளது.
லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. 4வது சனிக்கிழமையில் லியோ திரைப்படம் ரூ. 90 லட்சம் வசூலை பெற்றது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கார்த்தி நடித்த ஜப்பான் படம் வெளியாகி உள்ளதால், அத்திரைப்படம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. இதனால் லியோ திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளது.
எல்லா மொழிகளையும் சேர்த்து இந்தியா முழுவதும் இதுவரை லியோ திரைப்படம் ரூ. 336 கோடி வசூல் செய்துள்ளது. லியோ வெளியானதும், இது ஜெயிலர் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெயிலர் வெளியான 40 நாட்களில் இந்தியா முழுவதும் ரூ. 348 கோடியை பெற்றது.
லியோ வெளியாகி 24 நாட்களில் ஜெயிலர் வசூலை நெருங்கி உள்ளது. ஆனால் ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க முடியவில்லை. உலகம் முழுவதிலும் லியோ திரைப்படம் ரூ. 597 கோடியை பெற்றுள்ளது. ஜெயிலர் வசூல் ரூ.604 கோடி என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அதிக வசூலை பெற்ற 3வது தமிழ் படமாக லியோ மாறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“