ஆங்கிலத்தில் பாடிக்க : Leo box office collection Day 3 early reports: Vijay’s film bounces back, records 10% spike in earnings
தளபதி விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியான லியோ படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், இந்த படத்தின் வசூல் இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2-வது முறையாக இணைந்த படம் லியோ. இப்படத்தில் விஜய் தவிர, த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ் மற்றும் மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆயுத பூஜை விடுமுறையை குறி வைத்து லியோ படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியீட்டுக்கு முன்பே முன்பதிவில் சாதனை படைத்த லியோ படம், முதல் நாள் வசூலில் தென்னிந்திய மாநிலங்களில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. அதே சமயம், படத்தின் கலவையான விமர்சனம் காரணமாக 2-வது நாளான நேற்று வசூல் சற்று குறைய தொடங்கியது.
ஆனாலும் உடனடியாக எழுச்சி பெற்ற லியோ படம் 3-வது நாளான இன்று மீண்டும் வசூல் அதிகரித்துள்ளது. இது குறித்து இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கருத்துப்படி, லியோ இந்தியாவில் ரூ 40 கோடி வசூலித்துள்ளது. (ஆரம்ப மதிப்பீடுகள்), 2 ஆம் நாள் ரூ 35.25 கோடியில் இருந்து பாக்ஸ் ஆபிஸ் வருவாயில் 11.88 சதவீதம் அதிகரிப்பு பதிவு செய்தது. இதன் மூலம், லியோவின் இந்திய வசூலின் நிகர மதிப்பு ரூ.140.05 கோடியை எட்டியுள்ளது.
அதே நேரத்தில், மூன்று நாட்களில், லியோவின் உலகளாவிய வசூல் ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால் நேற்று (வெள்ளி) தமிழகத்தில் லியோ படம் குறைந்த அளிவிலான வசூலை செய்திருந்தாலும், இன்று வசூலில் மீண்டும் உயரத்தை எட்டியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று காலை காட்சி ஆக்கிரமிப்பு 65.73 சதவீதமாக இருந்தது, இது மாலை காட்சியின் போது 79.51 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது முந்தைய நாளின் இதே இதே நேரத்தில் 63.03 சதவீதம் மற்றும் 70.67 சதவீதமாக இருந்தது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் தினசரி வசூலை, அதன் முறியடிக்கும் வகையில், படத்தின் விமர்சனம் சுவாரஸ்யமாக உள்ளது. லியோவைப் போலவே, ஜெயிலர் (ஆகஸ்ட் 9) வெளியான முதல் மூன்று நாட்களில் முறையே ரூ 48.35 கோடி, ரூ 25.75 கோடி மற்றும் ரூ 34.3 கோடி வசூலித்தது.
அதே நேரத்தில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் லியோவின் போட்டி படமாக கருதப்படும், அனில் ரவிபுடி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி, இதுவரை உலகம் முழுவதும் ரூ. 25.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. லியோ படம் வெளியான நாளில், கேரளாவிலும் ரூ.12 கோடி வசூல் செய்து, இன்றுவரை மாநிலத்தின் முதல் நாள் வசூலில் முதல் படமாக உள்ளது.. கேரளாவில் மொத்தமுள்ள 750 திரைகளில் 650க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் லியோ படம் திரையிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.