Advertisment

Leo Box Office Collection Day 7: லியோ பாக்ஸ் ஆபிஸில் 53% சரிவு; 7-வது நாள் கலெக்ஷன் என்ன?

விஜய்யின் லியோ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமைக்குள் ரூ.500 கோடி வசூல் படைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று 7-வது நாளில் 53% சரிவு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Leo Vijay Box office

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ஆயுதபூஜையொட்டி கடந்த 19-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது என்றாலும் வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. லியோ ஆக்ஷன்-த்ரில்லர் படமாக அமைந்துள்ளது. விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.  பான்- இந்தியா படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 

வெளியானது. 

Advertisment

படம் வெளியான முதல் நாள் இந்தியா முழுவதிலும் ரூ.64 கோடி வசூல் செய்தது. இரண்டாம் நாளில் ரூ. 35 கோடி, முன்றாம் நாளில் ரூ. 39 கோடி, நான்காம் நாளில் ரூ. 41 கோடியும், 5ம் நாளில் ரூ.35 கோடி வசூல் செய்தது.  நேற்று விஜயதசமி நாளில் விடுமுறை நாளில் 65 % பேர் லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்துள்ளனர்.  கேரளாவில் நேற்று மட்டும் லியோ திரைப்படம் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

லியோ படம் வெளியாகி தற்போது வரை ரூ.248 கோடிக்கும் மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் ரூ.500 கோடி வசூல் படைக்கும் என கூறப்படும் நிலையில் 7-வது நாளில் வசூலில்  53% சரிவு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் ரூ.15 கோடி அளவிற்கு மட்டுமே வசூல் பெறப்படும் என இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்  கூறியுள்ளார். 

விஜய்யின் லியோ திரைப்படம் 2023-ம் ஆண்டில் வெளியான படங்களில் 5-வது அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay leo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment