ஆங்கிலத்தில் படிக்க : Leo box office collection Day 1: Vijay-starrer delivers biggest global opening of 2023, beats Jawan, Adipurush and Jailer
தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பல தடைகளை தாண்டி நேற்று வெளியான லியோ திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. அக்டோபர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் இந்தியத் திரைப்படத் துறைகளிலும் 2023-ம் ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற படமாக மாறியுள்ளது. இது குறித்து இண்டஸ்ட்ரி டிராக்கரான சாக்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, லியோ முதல் நாளில் உலகளவில் ரூ 140 கோடி வசூலித்துள்ளது.
அதே நேரத்தில் பிங்க்வில்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரூ 145 கோடி வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படமும் அதே எண்ணிக்கையுடன் தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது, ஆனால் முதல் வார இறுதிக்குப் பிறகு படம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அடுத்து ஷாருக்கான் நடித்த ஜவான் முதல் நாளில் ரூ.129.1 கோடி வசூலித்துள்ளது. அட்லீ இயக்கத்தில் பான்-இந்தியா படமாக வெளியான ஜவான், உலகம் முழுவதும் ரூ 1140.5 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் அதிக வருவாய் செய்த இந்திய படமாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ ஹிந்தி மற்றும் தெலுங்கு மாநிலங்களில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது. இந்தப் படம் தற்போது இந்தியாவில் ரூ.74 கோடியும் வசூலித்துள்ளது. இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் ஜவானை விடக் குறைவு. விஜய்க்கு முதன்மையான மார்க்கெட்டாக விளங்கும் தமிழ்நாடு, அதிகாலை காட்சிகள் எதுவும் நடத்தாததால், படம் ரூ.30 கோடி வசூல் செய்தது, அதைத் தொடர்ந்து ஆந்திரா - தெலுங்கானா மார்க்கெட்டில் ரூ.15 கோடி, கர்நாடகாவில் முதல் நாளில் ரூ.14 கோடியும், கேரளாவில் லியோ ரூ.11 கோடியும் (சாதனை) வசூலித்தது.
அதேபோல் லியோ அதன் தொடக்க நாளில் 86.92% தமிழ் ஆக்கிரமிப்பை பெற்றுள்ளது. காலைக் காட்சிகள் கிட்டத்தட்ட 86.35% ஆக்கிரமிப்பைக் கண்டன, இரவுக் காட்சிகள் 90% ஆக்கிரமிப்பு விகிதத்தைப் பெற்றன. லியோ படம் சென்னையில் 1282 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் படம் அதன் தொடக்க நாளில் உருவாக்கிய வேகத்தை அடுத்தடுத்த நாட்களில் தொடருமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முன்னதாக, வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று கணித்திருந்தார், இந்த எண்ணிக்கையை படம் எளிதாக முறியடித்துள்ளது. “இந்தியாவில், முதல் நாளில் 70 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக நான் கணிக்கிறேன். உலகளவில், தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில், தொடக்க நாளில் ரூ. 100 கோடி வசூலிக்கலாம்,” என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்திருந்தார்.
விஜய்யின் லியோ ஏற்கனவே ரஜினியின் ஜெயிலரை வீழ்த்திய நிலையில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் இருந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் கைதி மற்றும் விக்ரம் ஆகியோர் அடங்குவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.