Leo director Lokesh Kanagaraj injured: கேரளாவில் பாலக்காட்டில் உள்ள ஒரு திரையரங்கில் லியோ படத்துக்கு புரொமோஷன் செய்தபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகளை மீறிய கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
ஆங்கிலத்தில் படிக்க: Leo director Lokesh Kanagaraj injured during promotion at Kerala theatre; returns to Tamil Nadu
கேரளாவில் பாலக்காட்டில் உள்ள ஒரு திரையரங்கில் லியோ படத்துக்கு புரொமோஷன் செய்தபோது, லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகளை மீறிய கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. லியோ படம் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் வசூல் செய்து வரும் நிலையில், கேரளாவில் லியோ படத்தின் வசூல் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
விஜய்யின் லியோ திரைப்படம் வெளியான நாளில், கேரளாவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 12 கோடி வசூலித்தது. இது கேரளாவில் ஒரு படம் வெளியான முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
லியோ திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு மத்தியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செவ்வாய்கிழமை கேரளாவிற்கு சென்று ஒரு சில திரையரங்குகளை பார்வையிட்டு அங்குள்ள ஊடகங்களுடன் உரையாடினார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வருகிறார் என்ற தகவலால், பாலக்காட்டில் உள்ள அரோமா தியேட்டர் வளாகத்தில் கணிசமான பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அனைத்து கணக்குகளையும் தாண்டி, லோகேஷ் கனகராஜ் வந்தவுடன் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
/indian-express-tamil/media/media_files/MTz6bM5QHIPIu6h8cRg4.jpg)
கூட்ட நெரிசல் அலைமோதியதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காலில் லேசான காயம் ஏற்பட்டது, கட்டுப்பாடுகளை மீறிய கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், லோகேஷ் கனகராஜ் கேரளாவில் பார்க்க திட்டமிடப்பட்டிருந்த மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தமிழகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், அரோமா திரையரங்கில் எடுத்த ஒரு செல்ஃபியை பகிர்ந்துள்ளார். அதில், நூற்றுக் கணக்கான சினிமா ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜை கத்தி கூச்சலிட்டு உற்சாகப்படுத்துகின்றனர். இது குறித்து லோகேஷ் கனகராஜ் பதிவிடுகையில், “உங்கள் அன்பிற்கு நன்றி கேரளா.. பாலக்காட்டில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும். ❤️,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கூட்டத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய காயம் காரணமாக, மற்ற இரண்டு இடங்களுக்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் என்னால் செல்ல முடியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் கேரளாவில் சந்திக்க நிச்சயமாக வருவேன். அதுவரை அதே அன்புடன் லியோவை ரசித்துக்கொண்டே இருங்கள்” என்று லோகேஷ் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ், திருச்சூரில் உள்ள ராகம் தியேட்டர் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள கவிதா தியேட்டருக்குச் செல்லவும் அதைத் தொடர்ந்து மாலையில் கொச்சியில் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாலக்காடு அரோமா தியேட்டரில் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் அவருக்கு லேசாக காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கேரளா திரும்ப வேண்டியிருந்தது.
சினிமா ரசிகர்களுக்கு கைதி மற்றும் விக்ரம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை வழங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சமகால இந்திய சினிமாவில் மிகவும் மதிக்கப்படும், பாராட்டப்படும் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“