லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ. த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் அக்.15-முதல் முன்பதிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் படத்தை காண மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கி வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், இங்கிலாந்தில் லியோ பட விநியோகஸ்தரான அஹிம்சா என்டர்டெயின்மென்ட் விஜய்யின் லியோ ’15 ரேட்டிங் வெர்ஷனாக’ வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. அதோடு, படம் ரா-வாக வன்முறை, கோரக் காட்சிகளை கொண்டுள்ளது எனக் கூறியுள்ளது.
BBFC (பிரிட்டிஷ் போர்டு ஆஃப் ஃபிலிம் கிளாசிஃபிகேஷன்) உடனான விவாதத்திற்குப் பிறகு படம் 15+ வெர்ஷனில் வெளியிட அனுமதி பெற முடிந்தது. மேலும், அந்த பதிவில், “ #LEO 100% லோகேஷ் கனகராஜ் திரைப்படம் “ என்று கூறியுள்ளது.
தீவிர வன்முறை காட்சிகள் இருப்பதால் லியோ குழந்தைகள் பார்ப்பதற்கான படம் இல்லை. பலவீனமானவர்களுக்கானது (faint-hearted) இல்லை. லியோ 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இருந்தாலும், BBFC 18+ வழங்கியது. அதாவது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் பார்க்க முடியும். அதனால் 15-17 வயதுக்குட்பட்ட இளையவர்கள் இதை பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
“BBFC உடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, LEO இன் ’15’ மதிப்பிலான பதிப்பிற்கான பாதையை நாங்கள் கண்டறிந்தோம் (சில வன்முறை மற்றும் கொடூரமான பின்விளைவுகளின் அல்ட்ரா குளோஸ்-அப் காட்சிகளை மென்மையாக்குதல்). தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம், இந்தப் புதுப்பிப்புகள் துல்லியமாக செய்யப்படுவதை உறுதிசெய்தோம், படத்தின் கரு, ஓட்டம், தனித்துவமான தருணங்கள் மற்றும் தளபதியின் மிகவும் விரும்பப்பட்ட வெகுஜன ஈர்ப்பு ஆகியவற்றில் பூஜ்ஜிய விளைவுகளுடன் மேற்கொள்ளப்படும்," என்று விநியோகஸ்தர் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“