சிறையில் வானொலி, நாடக குழு, அதில் நடிகர்களாக கொலையாளிகள்; தனது ஜெயில் அனுபவம் பற்றி பேசிய லியோ பட நடிகர்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சஞ்சய் தத், சிறையில் தான் நடத்திய வானொலி நாடக்குழு குறித்து மனம் திறந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சஞ்சய் தத், சிறையில் தான் நடத்திய வானொலி நாடக்குழு குறித்து மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
leo

பாலிவுட்டின்  பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத். இவர் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisment

தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகரான சஞ்சய் தத் மிகவும் சுலபமாக இந்த புகழை பெறவில்லை. இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சஞ்சய் தத் தன் சிறை வாழ்க்கை குறித்து மன திறந்துள்ளார். அவர் பேசியதாவது, ‘நான் சிறையில் ஒய்சிபி (YCP) என்ற வானொலி நிலையத்தை தொடங்கி நிகழ்ச்சிகளை நடத்தினேன். இது சிறைக்குள் மட்டுமே ஒலித்தது. இதற்காக எனக்கு ஊதியமும் வழங்கப்பட்டது.

Sanjay Dutt Shares Childhood Photos Tamil News

Advertisment
Advertisements

இந்த நிகழ்ச்சிக்கு சிறை கைதிகள் சிலர் கதை எழுதி கொடுத்தார்கள். இதில் பல தலைப்புகள் குறித்து விவாதித்தோம். மேலும், சில காமெடி நிகழ்ச்சிகளையும்  நடத்தினோம்” என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், தான் சிறையில் நாடக குழு ஒன்று தொடங்கியதாகவும், அதற்கு தான் இயக்குநராக இருந்ததாகவும், கொலையாளிகள் நடிகர்களாக நடித்ததாகவும் பேசினார்.

தனது வாழ்க்கை குறித்து பேசிய நடிகர் சஞ்சய் தன், “ என் வாழ்க்கையில் நடந்த எதற்காகவும் நான் வருத்தப்படவில்லை. என் பெற்றோர் என்னை விட்டு சென்றதற்காக மட்டுமே நான் வருத்தப்படுகிறேன். அவர்கள் விரைவில் என்னை விட்டு சென்றுவிட்டனர்” என்று கூறினார். நடிகர் சஞ்சய் தத், சிறையில் தனக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, “நான் ஜெயிலுக்கு சென்ற போது நீண்ட தாடியுடன் சென்றேன். அப்போது போலீஸ் ஒருவர் எனது தாடியை சவரம் செய்வதற்காக மிஸ்ரா என்ற கைதியை என்னுடன் அனுப்பி வைத்தார்.

அவர் எனக்கு சவரம் செய்து கொண்டிருந்த போது நான் அவரிடம் எத்தனை ஆண்டுகளாக இந்த ஜெயிலில் இருக்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு மிஸ்ரா 15 ஆண்டுகளாக இருக்கிறேன் என்று கூறினார். என்ன குற்றம் செய்ததற்காக இத்தனை ஆண்டுகளாக சிறையில் இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அந்நபர் இரட்டை கொலை செய்வதற்காக சிறையில் இருப்பதாக கூறினார். அவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது அவர் கை எனது கழுத்தில் இருந்தது அந்த தருணம் எனக்கு மிகவும் பயங்கரமான ஒரு நிகழ்வாக இருந்தது என்று கூறினார்.

Sanjay Dutt leo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: