Advertisment

புதுச்சேரியில் ரசிகர் ஷோ ரத்து... கடைசி நேரத்தில் அதிர்ச்சி : லியோ ரசிகர்கள் அதிர்ச்சி

புதுச்சேரியில் காலை 7 மணிக்கு லியோ படத்தின் சிறப்பு காட்சி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
leo special show complaints number issues Trichy collector Tamil News

புதுச்சேரியில் லியோ சிறப்பு காட்சி ரத்து

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு தமிழகத்தில் 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்காத நிலையில், புதுக்சேரியில் காலை 7 மணிக்கு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தியேட்டர் உரிமையாளர்களின் அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 19-ந் தேதி (நாளை) வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம் மற்ற மாநிலங்களில் படம் அதிகாலை காட்சி திரையிட அனுமதி உள்ள நிலையில், தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் லியோ திரைப்படம் காலை 7 மணிக்கு வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளித்திருந்தார். இதனால் புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனிடையே தமிழகத்தில் படம் 9 மணிக்கு தான் வெளியாகும் என்பதால், தமிழகத்தில் இருந்து ரசிகர்கள் பலரும் கேரளா ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு படம் பார்க்க படையெடுத்து வந்தனர். அந்த வகையில் புதுச்சேரிக்கு செல்லும் தமிழக ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது புதுச்சேரியில் லியோ திரைப்படம் காலை 9 மணிக்கு திரையிட முடிவு செய்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் காலை 9 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுவதால் அதற்கு முன்னதாக லியோ படத்தை புதுச்சேரியில் 7 மணிக்கு திரையிட விநியோகஸ்தர்கள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நாளை காலை 7 மணிக்கு வெளியாக இருந்த லியோ படத்தின் சிறப்பு காட்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், தமிழகத்தில் வெளியாகும் அதே நேரத்தில் புதுச்சேரியிலும் லியோ திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். 7 மணி காட்சி அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது காட்சி ரத்து செய்யப்பட்டது அவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment