லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் "லியோ" படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக நுழைந்துள்ளது. கேரளா மற்றும் சில மாநிலங்களில் லியோ, அதிகாலை 4 மணிக்கு வெளியானது.
திரையரங்குகளில் லியோ படம் பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் ஆக ரிவ்யூஸ் கொடுத்து வருவதால், படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் சோஷியல் மீடியா ரிவ்யூஸ் பார்க்கும் போது, லியோ படம் எல்.சி.யு எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இடம் பெற்றுள்ளது தெளிவாகியுள்ளது.
முதல் நாள் விமர்சனங்கள் படத்துக்கு சாதகமாக உள்ளன. படத்தில் விஜய்யின் நடிப்பு, ஓபனிங் காட்சியில் இருந்தே பரவலான பாராட்டைப் பெற்றது. அவரது ஆக்ஷன், நடிப்பு திறமை பிரகாசிக்கிறது. இத்திரைப்படம் பெரும் வெற்றியை அடையும் என்றும், இண்டஸ்ட்ரி ஹிட்டாக கூட முடியும் என்றும் ஆன்லைன் வர்ணனையாளர்களால் கணிக்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் அசாத்தியமான கிராஃப்ட்ஸ்மேன்ஷிப், பாராட்டுகளை பெற்றுள்ளது.
தென்னிந்தியாவில் மட்டும் இல்லை, சுவாரஸ்யமாக லியோ, இந்தி ரசிகர்களிடமிருந்தும் பாசிட்டிவ் வரவேற்பை பெற்றுள்ளது, இது வட மாநிலங்களில் அதன் வெற்றிக்கான சாத்தியத்தை பரிந்துரைக்கிறது. இது முன் எப்போதும் தமிழ் படங்களுக்கு கிடைக்காத ஒரு விருந்து..
மொத்தத்தில், "லியோ" ஒரு வலுவான தொடக்கத்தில் உள்ளது.
Leo Twitter Review Updates
லியோ முதல் பாதி விமர்சனம்
எதிர்பார்த்ததை விட படம் சூப்பராக உள்ளது. தளபதி விஜய்யின் சம்பவம் இது. லோகேஷ் கனகராஜின் விறுவிறுப்பான திரைக்கதை, வேறலெவல்யா நீ. அனிருத் வழக்கம்போல் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு சண்டைக் காட்சியும் சிறப்பாக உள்ளது. ஹைனா காட்சி உலகத்தரத்தில் சிஜி செய்யப்பட்டு உள்ளது. பிளெடி ஸ்வீட் ஃபர்ஸ்ட் ஹாஃப்.
ஒரு காட்சியை கூட மிஸ் பண்ணிடாதீங்க
நடிகர் விஜய் தன்னுடைய கெரியரில் பெருமை கொள்ளும் படமாக லியோ உள்ளது. படத்தில் ஒரு காட்சியை கூட மிஸ் பண்ணிடாதீங்க. ஒவ்வொரு காட்சியும் முக்கியமானது. சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் படங்களின் பட்டியலில் இதுவும் இருக்கிறது. லியோ ஒரு டிரெண்ட் செட்டர்
முதல் பாதி கூஸ்பம்ப்ஸ்
லியோ எல்.சி.யு.வில் தான் உள்ளது. அருமையான படம், முதல் பாதி கூஸ்பம்ப்ஸ். இரண்டாம் பாதி மாஸ். அனிருத் மீண்டும் ஒருமுறை தன்னுடைய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார். லோகேஷுக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் படமாக லியோ இருக்கும்.
லியோ ஒரு விஷுவல் ட்ரீட்
லியோ ஒரு விஷுவல் டிரீட். கிளீன் ஆக்ஷன் எண்டர்டெயினர். ஆக்ஷன் காட்சிகள், விஜய்யின் தோற்றம், நடிப்பு மற்றும் அனிருத்தின் இசை என சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா இருக்கு. லோகேஷ் கனகராஜ் ஜெயிச்சிட்டயா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“