Advertisment

லியோ படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு சம்பள பாக்கி? தயாரிப்பாளர் உடன் பிரச்னையா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை லியொ படத் தயாரிப்பு நிறுவனம் பாக்கி வைத்துள்ளதாகவும் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் தகவல் வெளியான நிலையில், அது பொய்யான செய்தி, லோகேஷ் கனகராஜ் ரூ. 20 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
Leo Lokesh Kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை லியொ படத் தயாரிப்பு நிறுவனம் இன்னும் முழுமையாக தராமல் பாக்கி வைத்துள்ளதாகவும் 'லியோ' தயாரிப்பாளருடன் லோகேஷ் கனகராஜ் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அது பொய்யான செய்தி, லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்துக்கு ரூ. 20 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். குறுகிய காலத்தில் அபாரமான வளர்ச்சியை அடைந்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக விஜய் நடித்த 'லியோ' படத்தை இயக்கினார். இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இருப்பினும், லியோ படத் தயாரிப்பாளர் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் பாக்கி வைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.



லியோ படத் தயாரிப்பாளர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை முழுமையாக தரவில்லை என்றும், இன்னும் சம்பளத் தொகை பாக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளத்தை முழுமையாகத் தராமல் காலதாமதம் செய்வதால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அதனால், லோகேஷ் கனகராஜ் லியோ படத் தயாரிப்பாளர்களுக்கு எதிராக இயக்குனர் சங்கத்தை அணுக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மறுபுறம், 'லியோ' படத் தயாரிப்பாளருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் விநியோகஸ்தர் மற்றும் சமூக ஊடக பிரபலம் கார்த்திக் ரவிவர்மன், ஒரு இணையதள செய்தியை மறுத்துள்ளார். விஜய் மற்றும் அவரது படங்களுக்கு எதிராக போலியான செய்திகளை பரப்பியதற்காக அந்த இணையதளத்தை கிண்டல் செய்துள்ளார். 

மேலும், “ஒரு தயாரிப்பு நிறுவனம் இயக்குனருக்கு முழு சம்பளத்தையும் கொடுக்கவில்லை என்றால், படத்தின் இறுதி நகலை வழங்காமல் இருக்க இயக்குனருக்கு உரிமை உண்டு என்றும், தயாரிப்பாளருக்கு எதிராக சங்கத்தை அணுகலாம் என்றும் கார்த்திக் ரவிவர்மன் தெளிவுபடுத்தினார். 

லோகேஷ் கனகராஜ் 'லியோ' படத்தின் இறுதி வெளியீட்டை சரியான நேரத்தில் வழங்கினார், அவரது சம்பளம் முழுமையாக தரப்பட்டுவிட்டது என்று உறுதிப்படுத்தினார். அதனால், லோகேஷ் கனகராஜுக்கும், 'லியோ' தயாரிப்பாளருக்கும் இடையே எந்த சர்ச்சையும், கருத்து வேறுபாடும் இல்லை” என்று கார்த்திக் ரவிவர்மன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ், ‘லியோ’ படத்துக்கு மிகப்பெரிய அளவில் சம்பளத்தை உயர்ட்தி ரூ.20 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lokesh Kanagaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment