லியோ வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து காவல்துறை கடிதம் எழுதி உள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. படத்திற்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தாலும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டனர். படத்தின் வசூல் தொடர்பாக தினமும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்த 4 வது தமிழ் படம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் வசூல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பாளர் லலித்குமார் வெளிட்டார். அதில் படம் வெளியாகி 7 நாட்களில் ரூ. 461 கோடி வசூல் குவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பு கோரி படத் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து காவல்துறை கடிதம் எழுதி உள்ளது. ”வெற்றி விழா கொண்டாட்டம் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிவடையும்?. எவ்வளவு டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன? காவல்துறை பாதுகாப்பு அல்லாமல், தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? . பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களின் தகவல்களை அளிக்க வேண்டும். 5000 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“