லியோ படம் தொடர்பாக அரசியல் எதுவும் செய்யப்படவில்லை என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் தயாராகி உள்ள லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு லியோ படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கி உள்ளது. சமீபத்தில் வெளியான ஜெயிலருக்கு சிறப்பு காட்சிகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஜெயலிருக்கு சிறப்பு காட்சி வழங்காமல் லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது
” சிறப்பு காட்சி வேண்டும் என்று கோரிக்கை வைக்கும்பொழுது அதற்கு அனுமதி வழங்குகிறோம். சூழலுக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த காலத்தில் பல்வேறு படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். சமீபத்தில் விக்ரம் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோரிக்கை வந்தால்தான் அதை பரிசீலனை செய்ய முடியும். சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டால் அது பரிசீலிக்கப்படும். லியோ படம் தொடர்பாக எந்த அரசியலும் செய்யவில்லை” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“