Advertisment

நீதிமன்றத்தில் ஆஜரான தமிழ் நடிகை.. மீண்டும் அமீர்- யுவன் கூட்டணி.. காதலில் விழுந்த அதிதி ராவ்?

இன்றைய டாப்5 சினிமா செய்திகள் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
Mar 27, 2023 18:24 IST
Lets see todays top 5 cinema news

யுவன், அமீர் கூட்டணியில் வெளியான பருத்தி வீரன் உள்ளிட்ட படங்கள் மியூசிக் மற்றும் வசூல் ரீதியாகவும் சக்கைப் போடு போட்டுள்ளன.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் ஒரு ரவுண்ட் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பட விழா ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை சீக்ரெட் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், “தாம் அதிகாலையிலே எழுந்து, உடற்பயிற்சிகள் செய்வதாகவும், வளர்ப்பு நாயுடன் விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் நண்பர்களை சந்திக்க மறப்பதில்லை. இதுவே எனது வாழ்வியல் சீக்ரெட் எனத் தெரிவித்துள்ளார்.

கார்த்தியின் காற்று வெளியிடை படத்தில் நாயகியாக அறிமுகமாகி, செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமியின் ஆசை நாயகியாக பலரின் ஹார்ட் பீட்டை எகிறச் செய்தவர் அதிதி ராவ் ஹைத்ரி. இவர் தெலங்கானாவின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அகவை 30-ஐ கடந்த பின்னும் கட்டுடலுடன் வலம் வருபவர். இவரிடம் அண்மையில் நடிகர் சித்தார்த் உடன் காதலா என்ற கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பொறுமையுடன் பதில் அளித்த அதிதி, “இதுவரை இப்படி யாரும் என்னிடம் கேள்வி கேட்டதில்லை. ஒருவேளை அப்படி ஏதாவது இருந்தால் நானே சொல்வேன்” என்றார்.

தொடர்ந்து இதுதொடர்பான கேள்விகளை எழுப்ப, கடுப்பாகிவிட்டார் அம்மணி.

ஊரோரம் புளியமரம் என தமிழ்நாட்டையை உசுப்பி விட்ட இயக்குனர் அமீர், யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் படம் ஒன்றில் இணைய உள்ளனர்.

இந்தப் படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அமீர், யுவன் கூட்டணியில் ராம், மௌனம் பேசியதே, பருத்தி வீரன் உள்ளிட்ட படங்கள் மியூசிக் மற்றும் வசூல் ரீதியாகவும் சக்கைப் போடு போட்டுள்ளன.

வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வாரிசு நடிகரான கௌதம் கார்த்தி, நடிகர் சிம்பு இயக்கத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என தனது ஆசையை கூறியுள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த், 2021ம் ஆண்டு கார் ஓட்டி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரது தோழி உயிரிழந்தார். மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இந்த வழக்கில் ஆஜராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment