scorecardresearch

‘சென்னை… உங்களை காதலிக்கிறேன்; கூடவே அந்த ரசம் சாதம்..!’ பாலிவுட் நடிகை அசத்தல் பதிவு

விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்துள்ள லைகர் படத்தில், அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.

‘சென்னை… உங்களை காதலிக்கிறேன்; கூடவே அந்த ரசம் சாதம்..!’ பாலிவுட் நடிகை அசத்தல் பதிவு

விஜய் தேவரகொண்டாவுடன் லைகர் படத்தில் நடித்துள்ள நடிகை அனன்யா பாண்டே தமிகத்தில் தனக்கு ரசம் சாதம் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

ஹந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அனன்யா பாண்டே, ‘பதி பட்னி அவுர் வோ’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பிறகு ஹந்தியில் இரண்டு படங்களில் நடித்துள்ள அனன்யா தற்போது தெலுங்கில் லைகர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் பிரபல குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் முக்கிய கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இந்த படம், வரும் ஆகஸ்ட் 25-ந் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தில் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. நேரடியாக இந்தி தெலுங்கில் தயாராகியுள்ள படம் தமிழ் மலையாளத்தில் டப் செய்து வெளியிடப்படடுகிறது. இந்த படத்தின் தென்னிந்திய ப்ரமோஷனுக்காக சென்னை வந்திருந்த அனன்யா, ரசம் சாதம் போன்ற அன்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை – நான் உங்களை காதலிக்கின்றேன்!!! நீங்கள் என்னை அன்பால் மிகவும் நிரப்பினீர்கள் (மற்றும் ரசம் சாதம்).” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. லேசான நிற லெஹங்கா அணிந்திருக்கும் அனன்யா, படத்தில் முக்கிய திருப்புமுனையாக நடித்திருப்பாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”  

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Liger actress ananya pandey say about chennai and rasam satham