New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/actor-vishal.jpg)
actor vishal, south indian actors association
actor vishal, south indian actors association
TFPC Anti-Piracy Cell : கடந்த வாரம் வெளியான புதுப் படங்களை வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் ஆன்டி பைரசி குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 17-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படம் வெளியானது. இப்படம் வெளியான நாளில் இருந்து இன்று வரை பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. குறிப்பாக வார இறுதிகளில் டிக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் செம்ம கடுப்பில் இருக்கின்றனர். அதேபோல் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சண்டக்கோழி 2 படமும் வெளியானது.
இந்த இரண்டு படங்களுமே திரைக்கு வந்த ஒரு சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனால் படக்குழுவினர் அவர்கள் மீது கடுமையான கொந்தளிப்பில் இருந்தனர். குறிப்பாக விஷால் எவ்வளவு கடுப்பில் இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கத்தின் ஆன்டி பைரசி குழு, வட சென்னை மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய படங்களை பிரபல திருட்டு லீக் இணையத்தளமான தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டது. இதனை வெளியிட்ட இணையதளங்களை தயாரிப்பாளர் சங்கத்தின் ஆன்டி பைரசி குழு முடக்கியுள்ளது.
https://t.co/SCpjOzSdZnhttps://t.co/8zltttnjTnhttps://t.co/XOY8Z0O11Ihttps://t.co/MbGqknJv4hhttps://t.co/u6GMOWe4vEhttps://t.co/NNwWZFCb18
List of domains that has been suspended by TFPC Anti Piracy Cell for pirating the movies #VadaChennai & #Sandaikozhi2.#KillPiracy pic.twitter.com/4y0dkBShgC
— TFPC ANTI PIRACY CELL (@TFPC_Antipiracy) 20 October 2018
அதற்கான பட்டியலையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.