நடிகர் பிரபுதேவா, தித்யா நடித்த லக்ஷ்மி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மொ இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், பிரபுதேவா, தித்யா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் நடனத்தினை பற்றிய படம். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா, சிறுமி தித்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தபடம் லக்ஷ்மி திரைப்படம். இந்த படத்தில், வங்கி அதிகாரியாக பணிபுரியும் ஒற்றைத் தாயான நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) தனது ஒரே மகள் லக்ஷ்மியுடன் (தித்யா) வசித்து வருகிறார். லஷ்மிக்கு நாடி நரம்பெல்லாம் டான்ஸ்தான் ஊறிக்கிடக்கிறது. ஆனால், தாய் நந்தினிக்கோ நடனம் என்றாலே புடிக்காது. இந்த நிலையில், சேனல் 99 நடத்தும் 'பிரைட் ஆஃப் இந்தியா' டான்ஸ் போட்டிக்கான அறிவிப்பை டி.வி.யில் பார்க்கும் லக்ஷ்மி அதில் கலந்து கொள்கிறார். இதில் நடனத்தில் ஆர்வமுள்ள நிறைய சிறுவர்கள் நடித்துள்ளனர். லக்ஷ்மி படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். லக்ஷ்மி திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மொர்ராக்கா மட்ராக்கா பாடலும் தித்யாவின் நடனமும் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலுக்கு நடனம் ஆடும் தித்யா பேருந்துக்குள் எகிறி குதித்து கைப்பிடி கம்பிகளைப் பிடித்து தாவுவார். அந்த பாடல் தித்யா மிகவும் அழகாக நடனம் ஆடியிருப்பார்.
இந்த நிலையில், டிவியில் ஒளிபரப்பான லக்ஷ்மி திரைப்படத்தின் மொர்ராக்கா மட்ராக்கா பாடல் டான்ஸைப் பார்த்த சுட்டிக் குழந்தை தித்யா போலவே அழகாக டான்ஸ் ஆடுகிறார். அதில் தித்யா பேருந்து கம்பிகளில் எகிறி குதித்து பிடிக்கும்போது யாரும் எதிர்பாராத விதமாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த சுட்டிக் குழந்தை எகிறி குதித்து டிவியைப் பிடித்து கீழே தள்ளுகிறது. டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த குழ்ந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் டிவியைக் கவிழ்த்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
It only takes a few seconds... pic.twitter.com/90F0D9SHDk
— Kaveri ???????? (@ikaveri) December 22, 2020
டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த குழந்தை டிவியில் தித்யா தாவி பேருந்து கம்பிகளைப் பிடிப்பதைப் போல, குழந்தையும் தாவி குதித்து டிவியை கீழே தள்ளிய வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் குழந்தையின் சுட்டித் தனத்தையும் அதன் வெகுளித்தனத்தையும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் கம்மெண்ட் செய்து சிரித்து வருகின்றனர்.
An officer lost his son when the TV that was kept on top of the steel Almirah fell on the child. He must hve been 10,if i remember correctly.
— jyothi menon (@JyothiNair76) December 22, 2020
சில நெட்டிசன்கள், டிவியை உடையாமல் இருக்க சுவரில் மாட்டியிருக்கலாம் என்று கூறி அந்த குழந்தையின் சுட்டித் தனத்தையும் நடனத்தையும் புன்னகையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.