தலைவரை போலீஸாகப் பார்க்க ஆவலாக உள்ளேன் – கார்த்திக் சுப்பராஜ்

Rajinikanth's 'Darbar' Movie First Look Revealed Live: ‘தர்பார்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் தான் தற்போது இணைய வைரல்!

By: Apr 9, 2019, 4:29:18 PM

Rajinikanth-Nayanthara Starrer ‘Darbar’ First Look Live: ’பேட்ட’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

ரஜினியின் 167-வது படமான இதில், போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார். சந்திரமுகி, சிவாஜி (ஒரு பாடலுக்கு மட்டும்), குசேலன் ஆகியப் படங்களைத் தொடர்ந்து, இதில் நான்காவது முறையாக ரஜினியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா.

’பேட்ட’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ரஜினியின் இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றுகிறார்.

இந்நிலையில் தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. ‘தர்பார்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் தான் தற்போது இணைய வைரல்!

Live Blog
Rajinikanth's 'Dharbar' First look Live Updates இணையத்தை தெறிக்கவிடும் ‘தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக்!
14:45 (IST)09 Apr 2019
வாவ் தலைவா!

தலைவரை போலீஸ் அதிகாரியாகப் பார்க்க மிகுந்த ஆவலாக உள்ளேன் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். 

14:07 (IST)09 Apr 2019
நான் எதிர்பார்த்த கூட்டணி

ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்த்த கூட்டணி இது. ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு வாழ்த்துகள் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

13:07 (IST)09 Apr 2019
பிரஸ் ரிலீஸ்

தர்பார் படத்தைப் பற்றிய முழு விபரங்களுடன் பிரஸ் ரிலீஸ் வெளியிடப்பட்டுள்ளது. 

12:25 (IST)09 Apr 2019
படபிடிப்பு நாளை துவக்கம்

தர்பார் படத்தின் படபிடிப்பு நாளை மும்பையில் துவங்குகிறது. இடைவெளி இல்லாமல் நடக்கும் இந்த படபிடிப்பில், கலந்துக் கொள்ளும் ரஜினி, வாக்களிப்பதற்காக 18-ம் தேதி சென்னை திரும்புகிறார். 

11:49 (IST)09 Apr 2019
தர்பார் - அப்படின்னா?

அந்தக் காலத்தில் அரசர் தன்னுடைய தளபதிகளை சந்திக்கும் இடம் தான் தர்பார், அதாவது அரச சபை. 

11:22 (IST)09 Apr 2019
அனிருத் ட்வீட்

தர்பார் படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கும் அனிருத், ’இது தலைவரின் தர்பார்’ என ட்வீட் செய்துள்ளார். 

11:04 (IST)09 Apr 2019
2020 - தர்பார் பொங்கல்?

தர்பார் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் என்ற ஹேஸ் டேக்கை பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், 2020 பொங்கல் தர்பார் பொங்கலாக இருக்கும் என்பது தெளிவாகிறது!

10:49 (IST)09 Apr 2019
இன்று காலை லைகா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ஃபர்ஸ் லுக்

Darbar Live Updates: நடிகர் ரஜினிகாந்தின் புதிய படமான ‘தலைவர் 167’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது. ‘தர்பார்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Web Title:Live updates rajinikanths darbar firstlook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X