LKG Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் அடுத்தடுத்து புதுப்படங்களை ரிலீஸ் செய்வதால், அதன் ஒரிஜினல் இணைய முகவரியைத் தேடி இணையத்தில் பெரும் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை எந்த மொழி சினிமாப் படங்களையும் ரிலீஸான நாளிலேயே ஆன் லைனில் வெளியிட்டு மிரட்டி வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். நேற்று (பிப்ரவரி 22) காலையில் வெளியான ‘எல்.கே.ஜி’ தமிழ் திரைப்படத்தை மாலைக்குள் தனது இணையதளத்தில் வெளியிட்டு சினிமா உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
LKG Movie In TamilRockers: எப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறார்களோ?
TamilRockers Leaked LKG Tamil Movie: புதுப் படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ்
அடுத்தடுத்து புதுப் படங்களை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருவதால், அதன் இணைய முகவரியைத் தேடி இணையத்தில் பெரும் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸ் புதுப் படங்களை வெளியிட்டு வருவதால், பல முறை அரசு நிர்வாகங்கள் அந்த இணையதளத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கின்றன.
நீதிமன்ற உத்தரவுகள் மூலமாகவும் அந்த இணையதளத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் தமிழ் ராக்கர்ஸ் என ‘டைப்’ செய்தால், எந்த ரிசல்ட்டும் வராத வகையில் கூகுளும்கூட தமிழ் ராக்கர்ஸை தடை செய்ய தன்னால் இயன்ற பணியை செய்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் கூடுதலாக ஓரிரு ஆங்கில எழுத்துகளை தனது இணைய முகவரியுடன் சேர்த்துக்கொண்டு, அந்தப் புதிய இணையதளத்தில் படங்களை ரிலீஸ் செய்து விடுகிறது. இந்த புது இணைய முகவரியை சமூக வலைதளங்கள் மூலமாக அதன் வாடிக்கையாளர்களுக்கு பரப்பி விடுகிறார்கள்.
தமிழ் ராக்கர்ஸை தேடி பெருமளவில் வாடிக்கையாளர்கள் இணையத்தில் குவிவதால், விளம்பர வருமானத்தில் அந்த திருட்டு இணையதளம் கொழிக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் என்னதான் முயன்று ஒரு இணையதளத்தை முடக்கினாலும், இன்னொரு இணையதளமாக அது முளைத்து விடுகிறது.
ஒரே நாளில் வெளியான எல்.கே.ஜி., கண்ணே கலைமானே ஆகிய இரு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிவிட்டதாக கூறப்படுவது தமிழ் சினிமா உலகை கலங்கடித்திருக்கிறது. மாயமான் மாதிரி டிமிக்கி கொடுக்கும் இந்த இணையதளத்தை எப்படி கண்டுபிடித்து, எப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறார்களோ?