7 நாளில் ரூ100 கோடி வசூல்; கலெக்ஷனில் கல்லா கட்டும் லேடி சூப்பர் ஹீரோ: மோகன்லாலுக்கு போட்டி!

ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கிய இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம், அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கிய இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம், அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

author-image
WebDesk
New Update
Lokha Movie

இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் மற்றும் சாண்டி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த 'லோகா: சாப்டர் 1 - சந்திரா' திரைப்படம், வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது, ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கிய இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம், அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. நேற்று இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.7.1 கோடியை வசூலித்தது, இதன் மொத்த உள்நாட்டு வசூல் ரூ.46.14 கோடியாக உயர்ந்தது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

லோகா: திரையரங்க வசூல்

Advertisment

'லோகா' திரைப்படம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியான முதல் நாளில் ரூ2.7 கோடி மட்டுமே வசூலித்தது. ஆனால், பாசிட்டீவான விமர்சனங்கள் மற்றும் மவுத்டாக் விளம்பரங்கள் காரணமாக, வார இறுதியில் வசூல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. சனிக்கிழமை ரூ7.6 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ10.1 கோடியும் வசூலித்த இந்த படம், திங்கட்கிழமை வசூல் 28% சரிந்து ரூ7.2 கோடியாக இருந்தாலும், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் முறையே ரூ7.26 கோடியும் ரூ7.19 கோடியும் வசூலித்து வரவேற்பை பெற்று வருகிறது.

புதன்கிழமை, மலையாள பதிப்பு ரூ6.3 கோடியும், தெலுங்கு பதிப்பு ரூ89 லட்சமும் வசூலித்தது. திரைப்படம் மலையாளத்தில் 48.49% ஆக்கிரமிப்பையும், தெலுங்கில் 19.35% ஆக்கிரமிப்பையும் பதிவு செய்தது. இதன் மூலம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் ரூ93.75 கோடியை வசூலித்த 'லோகா', புதன்கிழமை மாலைக்குள் உலகளவில் ரூ101 கோடியை தாண்டியது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில், "இந்த முடிவில்லாத அன்புக் கடலுக்கு நன்றி!" என்று பதிவிட்டு இந்த வெற்றியைப் பகிர்ந்து கொண்டது.

லோகா சர்ச்சை

இத்திரைப்படத்தில் உள்ள ஒரு வசனம் கன்னட மொழி பேசுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறியதால், 'லோகா' சர்ச்சையில் சிக்கியது. இந்த சர்ச்சைக்குப் பிறகு, துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் ஃபிலிம்ஸ் மன்னிப்பு கோரியது. சர்ச்சைக்குரிய வசனத்தை படத்தில் இருந்து நீக்குவதாகவோ அல்லது திருத்துவதாகவோ தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்தது.

Advertisment
Advertisements

இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், "எங்கள் படமான 'லோகா: சாப்டர் ஒன்' படத்தில் ஒரு கேரக்டர் பேசிய வசனம் கர்நாடக மக்களின் உணர்வுகளை எதிர்பாராத விதமாகப் புண்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். வேஃபரர் ஃபிலிம்ஸில், நாங்கள் மக்களை மற்ற எதற்கும் மேலாக மதிக்கிறோம். இந்த கவனக்குறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம், எந்தவொரு குற்றமும் நோக்கமாகக் கொள்ளப்படவில்லை என்பதை உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

சர்ச்சைக்குரிய வசனம் விரைவில் நீக்கப்படும்/திருத்தப்படும். இந்த துயரத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம், எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லோகா vs ஹிருதயபூர்வம்

லோகா' மற்றும் மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானதால், வசூலில் மோதின. இருப்பினும், மோகன்லால் நடித்த 'ஹிருதயபூர்வம்' திரைப்படம் வேகம் பெற சிரமப்பட்டு, ஏழு நாட்களில் ரூ18.10 கோடி மட்டுமே வசூலித்தது, இது 'லோகா'வின் ரூ46.14 கோடியை விட மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: