Advertisment
Presenting Partner
Desktop GIF

தீராக் காதல்… இடையில் சின்ன ஊடல்; லோகேஷ் – ஸ்ருதிஹாசனின் ’இனிமேல்’ பாடல் ரிலீஸ்

ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்; இனிமேல் பாடல் வெளியீடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
inimel

ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்; இனிமேல் பாடல் வெளியீடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. 

Advertisment

ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆல்பம் பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். 

இந்தப் பாடல் இன்று (மார்ச் 25) மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததைப் போல், தற்போது யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இனிமேல் ஆல்பம் பாடல் வீடியோவை, துவர்கேஷ் பிரபாகர் இயக்கியுள்ளார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். பாடல் வரிகளை எழுதிய கமல்ஹாசன், இறுதியில் ஒரு சில வரிகளையும் பாடியுள்ளார்.

இன்றைய இளைஞர்களின் காதலில் இருக்கும் காதல், ஊடல், கோபம், சண்டை, அன்பு, பிரிவு, இணக்கம் உள்ளிட்டவற்றை ஒரே பாடலில் வெளிப்படுத்தவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. பாடல் வீடியோவில், தியேட்டரில் படம் பார்க்கும் காதலர்களான லோகேஷ் மற்றும் ஸ்ருதி, திரையில் தங்களை உருவகப்படுத்தி, காதலிக்கும்போது, திருமணத்தின்போது, திருமணத்திற்கு பின்னரும் தங்களுக்குள் என்னென்ன இன்ப துன்பங்களைச் சந்திக்கின்றோம் என்று அறிந்து, நிஜ வாழ்க்கையில் அந்த தவறுகளை செய்ய மாட்டோம் என்று முடிவெடுக்கின்றனர்.

இந்தப் பாடல் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகியுள்ளார். ஸ்ருதியுடன் இணைந்து லோகேஷ் நெருக்கமாக ரொமான்ஸ் செய்துள்ளார். இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lokesh Kanagaraj Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment