Advertisment

லியோ-2 வருமா? புன்னகைத்த லோகேஷ் கனகராஜ்

லியோ படத்தின் புரோமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் பல்வேறு யூடியூப் தளங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் வலையொளிக்கு அளித்த பேட்டியில், “இந்தப் படம் வழக்கமான விஜய் படமாக இருக்காது” என்றார்.

author-image
WebDesk
New Update
Leo Lokesh Kanagaraj

லியோ படத்தின் 2ம் பாகம் வருமா என்ற கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதில் அளித்தார்.

2021-ம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 2-வது படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு அக்.13 தொடங்கிய நிலையில், நேற்றுவரை 1.2 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisment

இந்த நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் பல்வேறு யூடியூப் தளங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் வலையொளிக்கு அளித்த பேட்டியில், “இந்தப் படம் வழக்கமான விஜய் படமாக இருக்காது.

இந்தப் படம் அதிரடி படமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தமான படமாக இருக்கும்” என்றார். மேலும் முதல்கட்டமாக இந்தப் படத்தை கொடைக்கானல் மற்றும் மூணாறு தேனி உள்ளிட்ட இடங்களில் படம் எடுக்க முயற்சித்தோம்.

பின்னர்தான் காஷ்மீரில் படம் எடுத்தோம். வெளிநாடு என சரியாக வராததால் அங்கு செல்லவில்லை. படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்ததால் கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன” என்றார்.

தொடர்ந்து லியோ 2வருமா என்ற கேள்விக்கு க்ளைமாக்ஸில் அது தொடர்பாக தெரியவரும் என்றார். மேலும் முதலில் காஷ்மிரில் படம் பண்ணும் போது முதலில் வீட்டுக்கு சென்றுவிடலாமா? என்று கூட நினைத்தோம்” என்றார்.

லியோ படத்தில் கேஜிஎஃப்: 2 மூலம் கன்னடத்தில் அறிமுகமான பிறகு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது லியோ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர் தவிர, அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lokesh Kanagaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment