Lokesh Kanagaraj as an actor In RJ Balaji Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தில் நடிகராக மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், பாடல் ஆசிரியர், ரேடியோ ஜாக்கி என பன்முக திறமை கொண்ட ஆர்.ஜே.பாலாஜி, எதிர் நீச்சல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர், தீயா வேலை செய்யனும் குமாரு என்ற படத்தில் சப்போட்டிங் ரோலில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, வடகறி, இது என்ன மாயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் விஜய் சேதுபதிபதியுடன் நடித்த நானும் ரவுடிதான் படம் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதன்பிறகு பல படங்களில் காமெடி மற்றும் முக்கிய கேரக்டரில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான வீட்ல விஷேஷம் என்ற படத்தை இயக்கி நடித்தருந்தார். அதனைத் தொடர்ந்து யங் மங் சங் என்ற படத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்க ஆகிய படங்களை இயக்கிய கோல் இந்த படத்தை இயக்கியுள்ளார். சத்தமில்லாமல் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அவர் இயக்குனர் லோகேஷ் கனராஜாவே நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தான் இயக்கிய மாஸ்டர் படத்தில் ஜெயில் கைதியாக சிறப்பு தொற்றத்தில் நடித்திருந்த லோகேஷ் தற்போது வேறொரு இயக்குனரின் படத்தில்நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil