30 வருஷத்துக்கு பிறகு சிகரெட் பிடித்த கமல்; விக்ரம் படத்தில் இதை கவனிச்சிங்களா? லோகேஷ் பாயிண்ட்ஸ்!

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு, விக்ரம் திரைப்படத்திற்காக புகைப்பிடிப்பது போன்று கமல்ஹாசன் நடித்தார் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு, விக்ரம் திரைப்படத்திற்காக புகைப்பிடிப்பது போன்று கமல்ஹாசன் நடித்தார் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Vikram scene

விக்ரம் திரைப்படத்திற்காக சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் புகைப்பிடிப்பது போன்று கமல்ஹாசன் நடித்தார் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கூலி திரைப்படத்தின் புரோமோஷனுக்காக அளித்த நேர்காணலின் போது இந்த தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்குபவர் கமல்ஹாசன். தனது ஆறு வயதில் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், தனது முயற்சியால் திரைத்துறையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் சென்றார் என்று கூறலாம். அந்த அளவிற்கு சினிமாவில் புதுமையை புகுத்திய பெருமை கமல்ஹாசனுக்கு இருக்கிறது.

தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் என்று கமல்ஹாசன் பெற்ற விருதுகளை பட்டியலிடுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. குறிப்பாக, சிறந்த நடிகர், சிறந்த வில்லன், சிறந்த இயக்குநர், சிறந்த தயாரிப்பாளர் என்று பல விருதுகளை வென்ற பன்முக திறமையாளராக கமல்ஹாசன் வலம் வருகிறார். எவ்வளவு தான் மாற்று சினிமாவில் கவனம் செலுத்தினாலும், அவ்வப்போது கமர்ஷியல் படங்களை கொடுப்பதற்கும் கமல்ஹாசன் தவறவிடுவதில்லை.

இதற்கு சிறந்த உதாரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தை கூறலாம். சுமார் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலித்து இப்படம் சாதனை படைத்தது. இந்நிலையில், விக்ரம் படத்திற்காக பல ஆண்டுகளுக்கு பின்னர் புகைப்பிடிக்கும் காட்சியில் கமல்ஹாசன் நடித்தார் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அதில், "விக்ரம் திரைப்படத்தில் கிரீன் டீயில், மதுபானத்தை மறைத்து வைத்து கமல்ஹாசன் அருந்துவது போன்று ஒரு காட்சி வரும். அப்போது, கமல்ஹாசன் நெற்றியில், சந்தானபாரதி விபூதி பூசி விட்டுச் செல்வார். இயல்பாக விபூதி வைக்கும் பழக்கம் கமல்ஹாசனுக்கு கிடையாது. ஆனால், இவ்வாறு படத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதி அவரை செய்ய வைத்தோம்.

மேலும், திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை கமல்ஹாசன் தவிர்த்து வந்தார். ஆனால், விக்ரம் படத்தில் அவரை தவறான மனிதர் என்று மற்றவர்கள் கூறுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்படி ஒரு பிம்பத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த, மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை இடம்பெறச் செய்தோம்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு, விக்ரம் திரைப்படத்திற்காக புகைப்பிடிப்பது போன்று கமல்ஹாசன் நடித்தார்.  கதைக்கு தேவைப்படும்பட்சத்தில், இவ்வாறு நடிக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தார்" என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Kamal Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: