Advertisment

கமல்ஹாசனின் இந்தியன் 2-வைப் பாராட்டிய லோகேஷ் கனகராஜ்; ‘ஜோக் அடிக்காதீங்க’ ட்ரோல் செய்த நெட்டிசன்கள்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் குறித்து பாராட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜை, ‘ஜோக் அடிக்காதீங்க’ சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
lokesh indian 2

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்தியன் 2 படத்தைப் பாராட்டிய நிலையில்,  ‘ஜோக் அடிக்காதீர்கள்’ என்று நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. 28 ஆண்டுகள் கழித்து, இந்தியன் 2 படத்தில் இந்த இரண்டு ஜாம்பவான்களின் கூட்டணி இணைந்தது. இந்தியன் 2 படம் அறிவிப்பு வெளியான நாள் முதல் சமூக ஊடகங்களில் அந்த படத்தைப் பற்றி பேசப்படாத நாட்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக எகிறியிருந்தது. இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். 

சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

Advertisment

அதே நேரத்தில், இந்தியன் முதல் பாகம் அளவுக்கு இந்தியன் 2 படம் இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், இந்தியன் 2 படம் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.  “கலை மீது கமல் சார் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதற்கு இந்தியன் 2 படம் மிகப்பெரிய சாட்சி” என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். மேலும், “பிரம்மாண்டமான படைப்பை கொடுத்துள்ள இயக்குநர் ஷங்கருக்கும் சிறப்பான பின்னணி இசையை கொடுத்துள்ள இசையமைப்பாளர் அனிருத்திற்கும்” லோகேஷ் கனகராஜ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியன் 3 படத்திற்காக காத்திருக்க முடியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்தியன் 2 படத்தைப் பாராட்டிய நிலையில்,  ‘ஜோக் அடிக்காதீர்கள்’ என்று நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஒரு எக்ஸ் பயனர், “இந்த விமர்சனத்தை நீங்கள் எப்படி கொடுக்கலாம்? லோகி நா.” மற்றொருவர், “யாரோ அவருக்கு இந்தியன் 1996-ஐ மீண்டும் காட்டியது போல் தெரிகிறது ... இந்தியன் 2 தலைப்பு அட்டை மற்றும் கிரெடிட்களுடன்.” என்று மற்றொரு எக்ஸ் பயனர் கிண்டல் செய்துள்ளார். மற்றொரு பயனர், “நாங்கள் காத்திருக்கத் தயாராக இல்லை” என்று கருத்து தெரிவித்தார்.

மற்றொருவர், இந்தியன் 2 படத்தின் இசையைப் பாராட்டியதற்காக லோகேஷ் கனகராஜ்ஜை டேக் செய்து, “மீண்டும் இதுபோல ஜோக் அடிக்காதீங்க” என்று குறிப்பிட்டுள்ளார். “விக்ரம் பட இயக்குனர் இந்தியன் 2-வைப் பாராட்டுவது இன்று நான் பார்த்த மிக மோசமான விஷயம். நீங்கள் கமல் ரசிகராக இருக்கலாம், லோகேஷ், ஆனால் இது மிகவும் மோசம்” என்று ஒரு எக்ஸ் பயனர் ரியாக்ட் செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸில் செம ஹிட் அடித்தது. லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lokesh Kanagaraj Indian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment