நடிகர் ரஜினிகாந்த் குறித்து விமர்சித்ததால், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரத்னகுமார் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலான சந்துரு அன்பழகன் என்பவர் இணை இயக்குனராக மாறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ், லியோ படத்திற்கு பின், அடுத்து ரஜினிகந்த் நடிக்கும் அவரின் 171-வது படத்தை இயக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு கூலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய 3 படங்களுக்கும் வசனம் மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியவர் ரத்னகுமார். மேயாத மான், ஆடை மற்றும் குளுகுளு ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர், அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளதால் கூலி படத்தின் இறுதிக்கட்ட திரைக்கதை பணி முடிந்தபின் விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக தற்போது சந்துரு அன்பழகன் என்பவர் கூலி படத்தின் இணை இயக்குனராக வசனங்கள் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சந்துரு அன்பழகன், கூலி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் குழுவுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் கூலி படத்தில் அவர் பணியாற்றுவது உறுதியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“